பக்கம்:சுதந்திரமா.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படாத காலிலும் படும்

இது மண்டையை உருட்டி மூளேயை முடுக்கிச் செய் யும் தத்துவ ஆராய்ச்சி அல்ல. தினந்தோறும் வாழ்க்கை யிலே நடக்கும் சமாசாரங்தான்; உண்மையான செய்தி; காலிருப்பவர்களும் கருத்திருப்பவர்களும் .ெ த ரி ந் து கொண்ட பழைய சமாசாரங்தான். ஆனல் இதைப்பற்றி யாரும் தனியாக யோசித்ததில்லை; அதல்ை இந்த விஷயம் இப்போதைக்குப் புதுமையாக இருக்கலாம்.

"பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்ற பழமொழியைப் பாட்டியும் சொல்கிருள் பேத்தி யும் சொல்கிருள். தோட்டியும் சொல்கிருன்; தொண்டை மானும் சொல்கிருன் வேதாந்தியும் சொல்கிருன் சம் சாரியும் சொல்கிருன் எல்லோருடைய வாக்கிலுைம் பலகோடி நூருயிரந்தடவை உச்சரிக்கப்பட்டு இந்தப் பழ மொழி இப்போது ஒரு மந்திரத்தைப் போல வழங்கி வரு கிறது. நல்ல வேளேயாக, "பட்ட காலிலே படும்” என்று மாத்திரம் சொன்னர்களே ஒழிய அதிலே ஒரு தானக் கலந்து குழப்பி வைக்கவில்லை. "பட்டகாலிலேதான் படும் என்று சொல்லியிருந்தால் அதற்குமேலே சிந்திக்கவே

எனக்கு இங்கே ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது. பொடுதலை என்பது ஒரு பச்சிலே அதைச் சில புண்களுக்கு வைத்துக் கட்டுவார்கள். வழுக்கைத் தலையைக்கூடப் பொடு தலை என்று சொல்லலாம். ஒரு வைத்தியர் யாரோ ஒரு மட சாம்பிராணியின் பிள்ளேக்கு வைத்தியம் பண்ணினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/55&oldid=685962" இலிருந்து மீள்விக்கப்பட்டது