பக்கம்:சுதந்திரமா.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - சுதந்தரமா!

t

அந்தப் பிள்ளைக்குக் காலில் புண். "பொடுதலேயை வைத்துக் கட்டு" என்று வைத்தியர் உத்தரவு செய்துபோய் விட்டார். அந்த மனுஷனுக்குப் பொடுதலேயென்ற மூலிகை இருப்பது தெரியாது. யாரோ வழுக்கைத் தலை, யுடைய சாது ஒருவர் ஊருக்கு வந்திருந்தார். அவர் தலையைப் பார்த்தவுடனே அந்த மனுஷனுக்குச் சந்தோஷம் கரை கடந்துவிட்டது. அவரை ஆசார உபசாரம் செய்து அழைத்து வந்து சமயம் பார்த்துப் பெரியவரை அமுக்கிப் பிடித்துத் தன் பிள்ளையின் காலோடு அவர் தலே சேரும்படி வைத்துக் கட்டிவிட்டான். பெரியவர் ஒன்றும் பண்ண முடியாமல் அந்த நோயாளிக்கு அருகில்ே கிடந்தார்.

நல்ல வேளையாக அன்று மாலேயே வைத்தியர் வந்தார். நோயாளியின் காலோடு பெரியவரைக் கட்டி யிருந்த அலங் கோலத்தைப் பார்த்தார். ' என்ன ஐயா, இது?’ என்று கேட்டார். " உங்கள் உத்தரவுப்படியே செய்திருக்கிறேன் ” என்று பல்லே இளித்துக்கொண்டே விஷயத்தைச் சொன்னன். வைத்தியர், " அடி முட்டாளே! முதலில் அந்தப் பெரியவரை அவிழ்த்துவிடு' என்று. கடிந்துகொண்டார். அவன் கட்டவிழ்த்து விட்டான்.

3.

சாதுவான அந்தப் பெரியவருக்கு அப்போதுதான் விஷயம் ஒருவாறு விளங்கியது. வைத்தியர் காலில் விழுந்து, "மகானுபாவா, இன்று உங்களால் நான் உயிர் பிழைத் தேன்' என்று சொன்னர் வைத்தியர், 'ஏதோ தெரியாமல் செய்துவிட்டான்' என்று வருத்தக் குறிப்போடு அவரைச் சமாதானம் செய்யலானர். 'அதெல்லாம் இருக்கட்டும். உங்கள் திருவாக்கில்ைதான் நான் பிழைத் தேன். நீங்கள் பொடுதலையை வைத்துக் கட்டு என்று சொன்னதால் நான் உயிர் வாழ்கிறேன். பொடுதலயை நறுக்கி வைத்துக் கட்டு என்று சொல்லியிருந்தால் என் கிலே என்ன ஆகியிருக்குமோ, ஸ்ர்வேசுவரனுக்குத்தான் தெரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/56&oldid=685963" இலிருந்து மீள்விக்கப்பட்டது