பக்கம்:சுதந்திரமா.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ணன் கலேதன் ஆனது 53

அத்தியந்த சிஷ்யனக இருந்தான் கர்ணன் தன்னைப் பிராம்மணனென்று சொல்லிக்கொண்டு குருகுல வாசம் செய்துவந்தான். - -

ஒரு நாள் பரசுராமர் கர்ணன் துடையில் தலே வைத் துச் சுகமாகத் துரங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வண்டு வந்து கர்ணனுடைய துடையைத் தொளேக்கத் தொடங்கியது. அதை மெல்ல ஒட்டிப் பார்த்தான். போக வில்லை. துடையை அசக்கினல் குருநாதருடைய இன்றுயில் கெட்டுவிடும். ஆகவே வண்டு துளைக்கத் துளைக்க அந்த வேதனையைச் சகித்துக்கொண்டு சிலபோல் அமர்ந் திருந்தான்.

தொடையிலிருந்து ரத்தம் பிரிட்டது. அது பரசுராமர் மேல் பட்டது. அந்த உணர்ச்சியால், அவர் விழித்துக் கொண்டு பார்த்தார். ரத்த மயமான சூழலிலே கர்ணன் அசைவற்று அமர்ந்திருப்பதைக் கண்டார். வண்டு துளைத் தும் அதைப் பொறுத்துக்கொள்ளும் ஆற்றல் க்ர்ணனுக்கு இருந்ததைக் கண்டு அவர் வியந்திருக்கக்கூடும்; ஆனல் அந்த வியப்பு வெளிப்படவில்லே; கோபங்தான் வெளி வந்தது.

'இந்த உறுதி பிராம்மணனுக்கு வராது; போர்க் களத்தில் மார்பில் அம்பு குத்தி ஊடுருவ ஊடுருவத் தளரா மல் உறுதியோடு போர் செய்யும் கடித்திரியனுக்குத்தான்

வரும். உண்மையைச் சொல். நீ யார்?' என்று விழிகளில்

இப்பொறி பறக்கக் கேட்டார். -

கர்ணன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். பரசு ராமர் ஊழித் தீயைப்போலக் கொதித் தெழுந்தார். "இந்தா, பிடி சாபம் என்னிடம் கற்ற வித்தைகளெல்லாம் உனக்குச் சமயத்தில் பயன்படாமற் போகட்டும்" என்று சாபங் கொடுத்துவிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/61&oldid=685968" இலிருந்து மீள்விக்கப்பட்டது