பக்கம்:சுதந்திரமா.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சுதந்தரமா !

மேலே பாரதக் கதையின் முடிவை நான் சொல்ல வேண்டாம்.

சாதியை மறைத்துக் கர்ணன் கலே பயின்றன். அந்த ரகசியம் பிறகு வெளியாயிற்று. அதன் விளைவு பாரதக் கதையில் பாண்டவர்களுக்கு வெற்றி.-இந்தக் கருத்தைச் சுற்றிச் சுற்றி என் எண்ணங்கள் சுழன்றன. என் கதைக்கு நாயகன் அகப்பட்டுவிட்டான். அவன் கலியுகக் கர்ணன், தன் சாதியை மறைத்து வித்தை பயின்றவன். அவன் ரகசியம் ஒரு காலத்தில் வெளிப்பட்டுவிடும். பாரதப் போரில்-சே! சே! இங்கே பாரதப்போர் வேண்டாம். அதை மாத்திரம் மாற்றிக்கொள்வோம்.

பரசுரா மருக்குப் பதில் குரு ஒருவர் வேண்டுமே: அவரை எப்படிச் சிருஷ்டிப்பது பரசுராமர் செய்தது பெரிய தவறு. அவ்வளவு காலம் தம்மோடு பழகித் தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஒரு சிறந்த மாளுக்க னிடத்தில் அவருக்கு அவ்வளவு கோபம் வந்தது நியாய மன்று. இந்தமாதிரி உண்டாவது, ஒன்று விலங்கினத்தின் சுபாவமாக இருக்க வேண்டும்;இல்லாவிட்டால் பற்றற்றவர் களுடைய வறட்சியான இருதயத்தின் விளைவாக இருக்க வேண்டும். நம்முடைய நாயகனின் குரு பரசுராம ராக இருக்கக்கூடாது. அவன் மனித இருதயம் உடையவ ய்ை, மாணுக்கனிடத்தில் மாருத அன்புடையவனுய் இருக்க வேண்டும். சாதியை மறைத்துத் தன்னிடம் பயிலும் மாணுக்கனது உண்மை தெரிந்தும் அவனுடைய இருதயத் தில் அன்பு ததும்பவேண்டும். * . . . . . .

இப்படியெல்லாம் கதையின் கரு உள்ளத்தில் உரு வாகிக்கொண்டிருந்தது. . ‘. . . . . . . . .

来 米,, - 兴 o - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/62&oldid=685969" இலிருந்து மீள்விக்கப்பட்டது