பக்கம்:சுதந்திரமா.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$60 . சுதந்தரமா !

முடிவு ஏற்படவில்லையே. முடிவுக்கு வேறு புதிய விஷயம் ஒன்று வேண்டுமே !

இயல்பாகவே கலைஞனுக்கு உயர்வு கொடுக்கவேண்டு மென்ற எண்ணம் கதையைக் கற்பனை செய்த உள்ளத் தின் அடித்தளத்திலே இருந்துகொண்டு சுருதி மீட்டிக் கொண்டிருந்தது. கலைஞனுடைய உயர்வு வெளிப்பட வேண்டும். அதை ஒரு கிகழ்ச்சியினல் வெளிப்பட வைக்க வேண்டும். - . .

கலைஞனுடைய உயர்வைப் பொருமை யுருவமாகிய கிருஷ்ணனே கண்டுகொள்ளும்படி ஒரு நிகழ்ச்சி இருந்தால் எவ்வளவு ரஸமாக இருக்கும் கதை ! முருகன் பண்ணும் பொம்மைகளே யெல்லாம் கிருஷ்ணன் எடுத்துப் போகிருன். அவற்றை விற்றுப் பணம் சம்பாதிக்கிருன். அந்த லாபத் தால் அவன் மனம் மாறுகிறது.-இப்படி எழுதலாமா?

சே, சே கதையின் சுவாரசியமே குட்டிச் சுவராய்ப் போய்விடும். பொருமைக்காரன் செய்யும் வேலையல்ல அது. அவன் பொம்மைகளை உடைத்தெறிவான். அதுதான் சரி. அவன் இருதய பூர்வமாகக் கலைஞனது உயர்வை உணர்ந்து மனம் மாறினால்தான் கன்ருக இருக்கும். இதற்கு என்ன வழி ? • , ... " * . . . நாராயண பிள்ளே-அந்தக் கிழவன்-ஏங்கிப் போய் உயிர் விடுகிருன் கிருஷ்ணன் தன் தந்தையை இழந்தான். முருகன் அந்தக் கிழவனுடைய ஞாபகத்தில்தான் உயிர் வாழ்கிருன்.

கலப் பொருள் அமரத்துவம் உடையதாயிற்றே : முருகன் தன் அன்புக்குப் பாத்திர்மான கிழவனக் கலைப் பொருளாக்கி அழியாத தன்மை கொடுத்துவிடக் கூடும். அவன் கிழவன்ப்போலவே உருவம் செய்கிருன் மிக அழகாக அமைத்துவிடுகிருன் அதை மூடி வைக்கிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/68&oldid=685975" இலிருந்து மீள்விக்கப்பட்டது