பக்கம்:சுதந்திரமா.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ணன் கலேதுன் ஆனது 6t

கிருஷ்ணன் அதையும் எடுத்துக்கொண்டு போகிருன்.. உடைக்க எண்ணித் திறக்கிருன். அவன் தகப்பன் உருவம். தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடுமல்லவா? அவனும் மனிதன்தானே ? அவனுக்குத் தன் தகப்பனிடத்தில் அன் பில்லையா? அவன் மனம் மாறுவதற்குத் தகுந்த நிகழ்ச்சி இது. அந்த உருவத்தைக் கண்டு, இதை உடைத்திருந்தே. னைல் என்ன பாதகம் செய்தவனுவேன் ' என்று இரங்கு கிருன். -

மனம் மாறிவிட்டது; கதையும் முடிந்து விட்டது. எனக்குப் பூரண திருப்தி உண்டாகவில்லை. இன்னும் கதையில் குறை ஏதோ இருப்பதாகவே எண்ணினேன்.

கிருஷ்ணன் முருகனிடம் போய் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிருன் பிறகு முருகனும் கிருஷ்ணனும் சேர்ந்து பழைய பொம்மை வியாபாரத்தை நடத்துவதா? அது கதையின் கம்பீரத்துக்குப் பொருத்தமாக இல்லை. கலைஞஆன. உயர்ந்த உள்ளமுடையவனுகச் சிருஷ்டிக்கவேண்டு மென் பதுதான் என் ஆவல். அவனுடைய உள்ளத்தில் ஒரு நிறைவை உண்டாக்குகிறேன். கிழவன் உருவத்தை வெற்றிகரமாகச் செய்து முடித்தது, கிருஷ்ணனின் பச்சாத். தாபம்-இந்த இரண்டும் கலைஞனுக்கு ஆறுதலை அளிக் கின்றன. ஆறுதல் பெற்ற அந்த உள்ளத்திலிருந்து எழு கிறது தியாகம் : "அண்ணே, இதுதான் கான் மனம் வைத்து என் உயிரைப்போல எண்ணிச் செய்தது. என் னுடைய மனத்தில் இருந்த ஆசை இப்போது கிறைவேறி விட்டது. இனிமேல் சத்தியமாக இந்தத் தொழிலை விட்டு விட்டேன். செருப்புத் தைப்பதே எனக்குப் போது மானது.” - .

கிருஷ்ணன் தன்னைப் பொம்மை செய்யவேண்டா மென்றபோது முருகன் செய்தான். அவன் மனம் மாறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/69&oldid=685976" இலிருந்து மீள்விக்கப்பட்டது