பக்கம்:சுதந்திரமா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளம்பர ஆசை 65

பெரிய பையனையே கவனித்துக் கொண்டிருக்கிருர். இந்த மனிதர் நம்மைக் கவனிக்கவில்லையே! என்று சின்னப் பையன் எண்ணுகிருன் உடனே அவன் குரல் பலமா கிறது. உரக்கப் படிக்கிருன் சத்தம் போடுகிருன் என்று நாம் சொல்லுகிருேம். அவனுக்கு அதுதானே படிக்கிற தென்பது? எப்படியாவது விருந்தினருடைய கவனத்தை இழுக்கவேண்டுமென்ற ஆசை அந்தச் சிறு குழந்தைக்கு உண்டாகிறது.

விருந்தினர் இப்போது தம் பார்வையை அந்தக் குழந்தையின்மீது திருப்புகிருர், "ஓ! உனக்கும் படிக்கத் தெரியுமா?" என்று கேட்கிருர். குழந்தைக்கு உச்சி குளிர்ந்து போகிறது. ஆல்ை அவனுக்கு வெட்கம் வந்து விடுகிறது. புத்தகத்தை மூடிவிட்டு அம்மாவிடம் ஒடிப் போய் விடுகிருன். அந்தமட்டிலும் விளம்பரம் செய்தது போதும் என்று திருப்தியடைகிருன்.

本 来 米

நான் முதல் முதலாக விமானப் பிரயாணம் செய் தேன். இலங்கைக்குப் போய் வந்தேன். விமானப் பிரயா ணம் என்பது புதிய அநுபவமாகவும், கவனிப்பதற்குரிய செய்தியாகவும் இன்னும் இருந்து வருகிறது. 'நான் விமா. னத்தில் போய் வந்தேன்' என்ருல், " அப்படியா !” என்று கிறிது மதிப்புடன் கேட்கிறவர்கள் இருக்கிருர்கள். இன்னும் சிலகாலம் போனல் அதன் அருமை மறைந்து போகும். அடிக்கடி எல்லோருமே விமானப் பிரயாணம் செய்கிறவர்கள் ஆகிவிடுவார்கள். "நான் ரெயிலில் ஊருக் குப் போய் வந்தேன்" என்று யாராவது இப்போது சொல் கிருர்களா? ரெயில் பிரயாணம் மனிதனோடு பிறந்த்தாகி விட்டது. அதுமாதிரி விமானப் பிரயாணமும் தண்ணிர் பட்ட பாடாகும் காலம் வரும். அப்போது அதைப் பற்றித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/73&oldid=685980" இலிருந்து மீள்விக்கப்பட்டது