பக்கம்:சுதந்திரமா.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளம்பர ஆசை 69

"அப்படியானல் சொல்கிறேன் கேளுங்கள். பழைய டில்லிதான் மெயில் புறப்படும் இடம். அங்கேயே வண்டி ஏறினேன். கூட்டம் சுமார்ாக இருந்தது. ஆனல் புதிய டில்லி வந்தது பாருங்கள் : மூட்டை முடிச்சுகளோடு குழந்தைகளும் குட்டியுமாக இரண்டு மூன்று குடும்பங்கள் நான் இருந்த பெட்டியில் ஏறிவிட்டன. அவ்வளவு பேருக் கும் இடம் வேண்டுமானுல் கந்தர்வர்கள் மாதிரி சிலபேர் ஆகாயத்தில் பறக்கவேண்டும்." -

“ஆகாயத்தில் பறப்பதாவது' என்று கேட்டு வைத் தேன். அவர் விமானப் பிரயாணத்தைப் பற்றிக் குறிப்பிடு கிருரோ என்ற சந்தேகம் எனக்கு.

"ஆமாம், வண்டியில் கூரைக்கும் தளத்துக்கும்

இடையே ஆகாயம் இருக்கிறதே. அங்கே பறப்பதைச் சொல்கிறேன். அப்போது நான் என்ன செய்தேனென்று நினைக்கிறீர்கள் ?......”

நான் என் விமானப் பிரயாண அநுபவத்தைச் சொல்லப் போய், அவர் தம்முடைய டில்லிப் பிரயாண அதுபவத்தையல்லவா சொல்ல ஆரம்பித்து விட்டார் !

"எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது" என்று சொல்லித் தப்பித்துக் கொண்டேன். எனக்கு மட்டும் விளம்பர ஆசை இருக்கிறதென்பது இல்லை; உலகில் எல் லோருக்கும் அந்த ஆசை எப்போதும் இருந்துகொண்டே தான் இருக்கிறது. தம் தம்முடைய அநுபவத்தை எப்படி யாவது பிறர் காதில் போடத்தான் வேண்டுமென்று கங்க ணம் கட்டிக்கொண்டிருக்கிறவர்கள் கூட்டம் அதிகமாக உலகத்தில் இருப்பதல்ைதான் பலருக்குப் பொழுது போகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/77&oldid=685984" இலிருந்து மீள்விக்கப்பட்டது