பக்கம்:சுதந்திரமா.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரளிகர்கள் 71

இதை அரசன் கவனித்தான். அந்தப் பழைய கம்பளியை அத்தனை மதிப்போடு எடுத்து வைத்துக் கொள்கிருனே, ஏன்? என்ற யோசனை வந்தது. அவனேயே கூப்பிட்டுக் கேட்டான். இடையன் சொன்னதைக் கேட்டு அரசன் வியப்பில் ஆழ்ந்தான். "சபையிலுள்ள அத்தனே பேரும் கான் காதை ஆட்டுவதையும், மாடுபோலக் கத்து வதையுமே கவனித்தார்கள். ஆனல் அந்த இடையனே மாட்டின் நுட்பத்தை கன்கு அறிந்தவன். மாட்டின்மேல் ஈ உட்கார்ந்தாலும், ஒரு சிறிய கல் போட்டாலும் அந்த இடத்தை மாத்திரம் சுழித்துக்கொள்ளும் இயல்பு அதற்கு உண்டு. கான் அந்த வகையிலும் மாட்டைப்போலச் செய்ய முடிகிறதா என்பதை அறியும்பொருட்டு என் அருகில் வந்து ஒரு பருக்கைக் கல்லே எடுத்துப் போட்டான். நான் அந்த இடத்தை மாத்திரம் சுழித்துக்கொண்டேன். நுட்பம் தெரிந்த இடையன் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து இதை அளித்தான். அவன் அளித்த பரிசு உயர்வானது என்று நான் கருதுகிறேன். ஏனென்ருல் என் வித்தையின் துட் பத்தை அவன் ஒருவன்தான் அறிந்து ரஸித்தான்” என்று விளக்கம் செய்தான். அர்சனுக்கு அப்போதுதான் இடை யன் கல்ல. ரஸிக சிரோமணி என்பது தெரியவந்தது. - எல்லா ரஸிகர்களேயும் விட நுட்பம் அறிந்து வியக்கும் ரஸிக சிரோமணியாகிய இடையன் அளித்த பரிசு மற்றவர் களுக்குச் சாமானியக் கம்பளிதான். ஆனால் வித்தை யாடிக்கோ உயர்ந்த பொக்கிஷம். கலைஞர்களுக்குப் பண மும் காசும் பட்டமும் தரும் மகிழ்ச்சியைக்காட்டிலும் இடம் கண்டு சுவைக்கும் ரஸிகர்களின் பாராட்டினல்தான் அதிக மகிழ்ச்சி உண்டாகிறது. o

மேடையிலே ஏறி ஏதோ அற்புதமான விஷயத்தைப் பேசுகிருேம். பல நாள் ஆராய்ந்த செய்தியை ரஸ்மாகச் சொல்ல முற்படுகிருேம். ஆனல் முன்னலே சபையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/79&oldid=685985" இலிருந்து மீள்விக்கப்பட்டது