பக்கம்:சுதந்திரமா.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 - சுதந்தரமா !

உட்கார்ந்தவர்களுடைய முகங்களில் மலர்ச்சி ஏதும் தோன்ருவிட்டால் நமக்குப் பேச்சு எழுவதில்லை. சொல்ல வேண்டிய விஷயங்களெல்லாம் மறந்து போகின்றன. குரல் எடுப்பாக வருவதில்லை. 'இவர்கள் நன்ருக ரஸிக்க வில்லையே' என்ற எண்ணம் மனசுக்குள் வேதனேயை உண்டாக்கத் தொடங்குகிறது. அதல்ை பேசுவதற்குத் தடையும் ஊக்கக் குறைவும் உண்டாகின்றன. மின்சார சக்தி பாய்ந்த கம்பி, கட்டையைக் கண்டால் ஒன்றும் பய னின்றி கிற்பதைப்போல நம்முடைய ஊக்கமும் தடை பட்டு கின்றுவிடுகின்றது. ..

ஆனல் முன்னலே உட்கார்ந்திருப்பவர்கள் ரவிகர்க ளாக இருந்து விட்டாலோ, எத்தனை உற்சாகமாகப் பேச்சு வருகிறது! நாம் கினேயாத பொருள்களெல்லாம், அந்தச் சமயத்துக்கென்று எங்கிருந்தோ வந்து கைகொடுக்கின்றன. புதிய புதிய உவமைகளைச் சொல்கிருேம். புதிய புதிய கருத்துக்களை அள்ளி வீசுகிருேம். ஏதோ புதிய ஆற்றல் பெற்றதுபோல மேலே மேலே ஊக்கங்கொண்டு பேசு கிருேம். பேசி முடிந்த பிற்பாடு, “காமா இத்தனையும் பேசினுேம்?" என்று கூட நமக்குத் தோன்றிவிடுகிறது. இதற்குக் காரணம் என்ன ? முன்னலே அமர்ந்திருக்கும். சளிகர்களின் முகமலர்ச்சிதான். அதுவும், டுவே இரண் டொரு கைதட்டல் கிடைத்து விட்டதானல், பிறகு பேச்சு அசுவகதியில்தான் செல்லும்.

இயற்கையாக அறிவும் பேச்சுத் திறமையும் இருந்தா லும் ர்ஸிகர்களுடைய முன்னிலையில் அது பல மடங்கு அதிகமாக விளக்கத்தை அடையும்.

பயிர் நிறைந்த பாத்தியில் பயிர் தானே வளர்கிறது: அதற்கு நீரும் விட்டால் எப்படி இருக்கும்? மேலும் மேலும் வளரும். இ ல் லா வி ட் டால் முளை கிளம்பி இரண்டு இலை கிளம்பிப் பிறகு கருகிப்போய்விடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/80&oldid=685986" இலிருந்து மீள்விக்கப்பட்டது