பக்கம்:சுதந்திரமா.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரளிகர்கள் 73

இதேமாதிரி கல்ல ரஸிகர்களுடைய கூட்டத்தில் ஏதாவது ஒன்றைச் சொன்னல், மேலும் மேலும் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கும். இதைத் திருவள்ளுவர் சொல்கிரு.ர். -

' உணர்வது உடையார்முற் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரித் தற்று." - பிறர் எடுத்துக் காட்டவேண்டிய அவசியமே இல்லா மல் சுவையுள்ள பகுதிகளே நுட்பமாக உணர்ந்து இன் புறும் ரஸிகர்கள் கூடிய சபையில் ஒன்றைச் சொல்வது, நிலத்தின் வளத்தாலும் வித்தின் சிறப்பாலும் தானே வளரும் பயிருக்குப் பாத்தியிலே கீரையும் பாய்ச்சினுற் போலாகும்!

ஒரு வடமொழிப் புலவர் பிரம்மதேவனே வேண்டுகிரு.ர்.

"சுவாமி! நீர் என் தலையில் என்ன வேண்டுமானலும் எழுதிக் கொள்ளும். அதனல் வரும் பலனே அநுபவிக்கச் சித்தமாக இருக்கிறேன். ஆல்ை ஒன்றுமாத்திரம் எழுத வேண்டாம் சுவாமி எழுத வேண்டாம். ரஸிகத் தன்மை இல்லாதவனிடம் சென்று நான் பாடிய கவியைச் சமர்ப்பிக் கிற பரிதாப நிலை எனக்கு வேண்டாம். அப்படிச் சமர்ப் பிக்கும்படியாக என் தலையின்மேல் எழுத வேண்டாம்; எழுத வேண்டாம்; எழுத வேண்டாம் என்று அந்தப் புலவர் சொல்கிருர், "எழுதாதே, எழுதாதே, எழுதாதே" என்று மூன்றுமுறை சொல்லுகிருர், . . . . . .

'ஸிகர் அல்லாதவர்களிடம் ப்ோய்ப் பட்ட துயரங் களே எத்தனையோ புலவர்கள் பாடியிருக்கிருர்கள்.

ஒரு புலவர் பாட்டுப் பாடினர். யார் யாரிடமோ காட்டினர். அவர்கள் மதிக்கவில்லை. பொதுவாகப் பாடி ல்ை இவர்களுக்குச் சிரத்தை இல்லை. இவர்களைப்பற்றியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/81&oldid=685987" இலிருந்து மீள்விக்கப்பட்டது