பக்கம்:சுதந்திரமா.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை வளர்ப்பு 77.

குழந்தைக்கு இங்கிலீஷ் தெரியுமா என்ன? பச்சை, மஞ்சள். சிவப்பு ஆகிய வண்ணங்கள் பழுக்காய்ச் செப்பைப்ப்ோல் பளபள வென்று தெரிந்தன. அவற்றைப் பார்த்துப் புரட்டிக்கொண்டே இருந்தான். காகிதங்கள் அவன் கைக் குள் கசங்கி மடங்கி கலிந்தன. நான் வந்து பார்க்கையில் புத்தகம் அவனுடைய துடையின்மேல் விரிந்து கிடந்தது. அவன் குனிந்தபடியே அதைப் பார்த்துக் கொண்டி ருங்தான். . -

எனக்குக் கோபம் வந்தது. முன்பெல்லாம் இப்படி நான் கண்டால் உடனே பளார் என்று அவன் முதுகில் அறைந்திருப்பேன். இப்போது, கான் குழந்தை வளர்ப்புப் புத்தகங்களைப் படித்து அறிவு பெற்றவனுயிற்றே! ஆகை யால் கோபம் வந்தாலும் அடக்கிக்கொண்டேன். அதைத் தொடாதே' என்று கத்த ஆரம்பித்தேன். அதற்குள், 'குழந்தையினிடம் அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே. என்று தடுத்தால், அது அந்தக் காரியங்களே அப்போ தைக்குச் செய்யாமலிருந்தாலும் மறைவாக அவற்றைச் செய்ய ஆரம்பிக்கும். வேறு ஒரு காரியம் செய்யும்படி அதன் கவனத்தை மாற்றுவதுதான் நல்ல வழி” என்று ஒரு புத்தகத்தில் வாசித்தது கினேவுக்கு வந்தது. ஆதலால் அதற்கு வேறு ஒரு புத்தகத்தைக் கொடுத்து அமெரிக்கப் பத்திரிகையை வாங்குவதுதான் குழந்தை வளர்ப்புக் கலை யின்படி நடப்பதாகும் என்று எண்ணி, வேறு எதை யாவது கொடுக்க முயன்றேன். அலமாரியில் ஒரு புத்தகம் இருந்தது. அது இன்னதென்று பார்க்காமலே அதை எடுத்துக் குழந்தையிடம் காட்டி, "இதோ பார் இந்தா. பாத்தையா ஆனே” என்று சொல்லி அதை அவன்மேல் போட்டுவிட்டு, அவன் கையிலிருந்த என் பத்திரிகையைப் பிடுங்கிக் கொண்டேன். வேறு ஒரு புத்தகத்தைக் கொடுக் கத் தெரிந்ததே ஒழிய, அதனிடம் குழந்தையின் கவனத்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/85&oldid=685991" இலிருந்து மீள்விக்கப்பட்டது