பக்கம்:சுதந்திரமா.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*8 சுதந்தாழ 1.

தைச் செலுத்தச் செய்து, பிறகு என் பத்திரிகையை வாங்குவதற்குப் பொறுமையில்லே. * : . . .

தன்னிடமிருந்த விளையாட்டுப் பொம்மையைப் பிடுங் கிக்கொண்டால் குழந்தை அழுது வீம்பு பிடிப்பது இயல்பு. இந்தக் குட்டிப் பயலும் அதைத்தான் செய்தான். நான் கொடுத்த புத்தகத்தைக் காலாலே தள்ளிவிட்டுக் கத்தினன். பத்திரிகைதான் வேண்டுமென்று அழுதான். அவன் தள்ளிவிட்ட புத்தகத்தை மறுபடியும் அவனிடம் கொடுத்தேன். அவன் ஆ. ஊவென்று கத்தினன். அந்தப் புத்தகத்தைத் தாறுமாருகக் கிழித்தான். அது ஏதோ கேட்லாக் என்று தோன்றியது; ஆகையால் அது கிழி வதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. குழந்தை மறுபடி யும் என் கையில் இருந்த பத்திரிகைக்குத் தாவினன். நான். "உதைப்பேன்" என்று கத்தினேன். அதுவரையில் இருந்த என் கிதானம் தவறிவிட்டது.

இந்த ஆரவாரத்தினிடையே என் மனைவி அடுப்பங் கரையிலிருந்து வந்தாள். 'என்ன இது ரகளே? குழந்தையை ஏன் அழவிடுகிறீர்கள்?' என்று கேட்டாள். - r

' 5T@ அழவிட்டேன்? போக்கிரி. இந்தப் பத்திரிகை வேண்டுமாம். இவன் கையில் அகப்பட்டால் புத்தகம் 'உருப்படியாக இருக்கும்ா?" என்றேன்.

அவள் கண்ணில் குழந்தை கிழித்தெறிந்த புத்தகம் பட்டது. பரபரப்புடன் ஓடிவந்து அதை எடுத்தாள். "ஐயையோ! இதை யார் இவனிடம் கொடுத்தார்கள் ? கோலப் புத்தகமல்லவா இது? கமலியினிடம் இரவல்

வாங்கி வந்தேன். அலமாரியில் வைத்திருந்த இதை யார், எடுத்துக் கொடுத்தார்கள்?' என்று அவள் கேள்விமேல் கேள்வியை அடுக்கிள்ை. அங்கலாய்த்தாள். அதோடு .கின்ருளா? 'கொல்லு ஊரார் புத்தகத்தை இப்படியா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/86&oldid=685992" இலிருந்து மீள்விக்கப்பட்டது