பக்கம்:சுதந்திரமா.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவைத் தலேவர் 81

அவைத் தலைவர் நல்ல பேச்சாளியாக இருந்தால் ஒரு வகை ஆபத்து உண்டாகும். சில தலைவர்கள் கூட்டம் கடக்கும் நேரத்தில் முக்கால்வாசிப் பொழுதைத் தாமே எடுத்துக் கொண்டு விடுவார்கள். முன்னுரை யென்று ஒரு மணி நேரம் பேசுவார்கள். பிறகு சொற்பொழிவாளரை அறிமுகப்படுத்த ஒரு கால்மணி நேரம். அதோடு நின்ருல் நன்ருக இருக்கும். சொற்பொழிவாளர் பேச இருக்கும் பொருளைப்பற்றி மறுபடியும் அரை மணி நேரம் பேசுவார் கள். சொற்பொழிவு செய்ய வந்தவர் அரைகுறை ஆசாமி யாக இருந்தால், தாம் சொல்வதாக எண்ணியிருந்த அத்தனை விஷயத்தையும் அந்தப் படுபாவித் தலைவர். ஒவ், வொன்முகப் பறித்துக் கொள்வதை அறிந்து திண்டாடு வார். தலைவர் முன்னுரை ஒரு வழியாக முடிந்து சொற் பொழிவாளர் பேசுவார். அவர் பேச்சு முடிந்தவுடன் இந்த, வாயாடித் தலைவர்கள் அடுத்த சொற்பொழிவாளரை அழைப்பதில்லை. கடந்த சொற்பொழிவின் பின்னுரையாக அரை மணியோ, ஒரு மணியோ பொழிந்து தள்ளிவிடுவார். அவையில் இரண்டு மூன்று ப்ேருடைய சொற்பொழிவு களேப் போட்டிருந்தால் வந்தது ஆபத்து. ஒவ்வொன்றுக்கும் முன்னுரை, பின்னுரை கூறுவதில் அவைத் தலைவர் முனைந்து, அவையோர்களின் பொறுமையைச் சோதித்து விடுவார். c -

புத்திச்ாலியான அவைத் தலைவர்கள் முன்னுரையில் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லி விடுவார்கள். சொற் பொழிவாளர்கள் எல்லாம் பேசின. பிற்பாடு எல்லாச். சொற்பொழிவுகளுக்கும் சேர்த்துப் பின்னுரை சொல் வார்கள். இப்படிச் செய்தால் சொற்பொழிவாளர்களும் அதிருப்தியை அடையமாட்டார்கள் : சபையினரும் மதிப் புக் கொடுப்பார்கள். இதை விட்டுவிட்டு, ' எங்கே நமக்குப் பேச இடம் கிடைக்காமற் போய்விடுகிறதோ?:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/89&oldid=685995" இலிருந்து மீள்விக்கப்பட்டது