பக்கம்:சுதந்திரமா.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சுதந்தரமா t

எங்கேயோ அவர்கள் இரண்டு பேருக்கும் வாய்ச்சண்டை கடந்திருக்கும். அந்தச் சண்டையின் வாசனே இங்கும் வந்துவிடும். அத்தகைய சமயங்களில் அவைத் தக்லவர் சாமர்த்தியமாக அவருக்குச் சூடு கொடுக்க வேண்டும்.

மனிதர்கள் தங்களுடைய விருப்பு வெறுப்புக்களேச் சமயம் வந்தபோது காட்டிக் கொள்வது இயல்பு. வாழ்க்கை யில் அப்படிக் காட்டிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் பல வரும். ஆனல் அறிவாளிகள் என்று சொல்லிக் கொண்டு மேடைமேல் பேச வருகிறவர்கள் கூடிய வரையில் இந்த விஷமங்களே அடக்கிக்கொண்டு பேசினால்தான் பேச்சுக் கலே உயர்வை அடையும். பேசுகிற்வர்கள் அப்படி இருக்க வேண்டுமானல் அவைத்தலைவர்கள் பின்னும் பெருந்தன்மை யுடன் கடந்துகொள்ள வேண்டும். அவைக்குத் தலைவர்க ளாக வருகிறவர்கள் மக்களின் மதிப்பைப் பெறவேண்டு மால்ை, தம்முடைய சொந்த விருப்பு வெறுப்புக்களையும் சில்லறைக் குறும்புகளையும் விட்டுவிட்டு மேடையில் ஏற வேண்டும். அப்படி இல்லாதவர்கள் அவைத் தலைமை வகித் தால் அவர்கள் இரண்டு கால் மனிதராக இருந்தும் நாற்காலி மனிதராக நடந்து கொள்வார்கள். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/92&oldid=685998" இலிருந்து மீள்விக்கப்பட்டது