பக்கம்:சுதந்திரமா.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீட்டுக் கணக்கு

அன்றன்று ஆகிற செலவை விடாமல் குறித்துக் கொள்வது நல்லது. பெண் பிள்ளைகள் வீட்டுக் கணக்கை எழுதி வைக்கவேண்டும். அது பல காரியங்களுக்கு உதவி யாக இருக்கும் என்று எப்போதோ படித்திருந்தேன். டைரி எழுதுவதும், வீட்டுக் கணக்கு எழுதுவதும் சிலருக் குத்தான் இய்ற்கையாகப் பொருந்துகின்றன. என்னேப் போன்றவர்களுக்கு எழுதவேண்டும் என்ற ஆசை இருக் கிறது எழுதியும் வருகிறேன். ஆனல் எப்படி எழுத வேண்டுமோ, அப்படி எழுதுகிறதில்லை. -

விட்டுக் கணக்கு விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம். "ஒரு வீட்டில் என்ன கணக்கு அப்படி விரிவாக இருக்கப் போகிறது? என்று சிலர் கினைக்கக்கூடும். அரசாங்கக் கணக்கைவிட வீட்டுக் கணக்குச் சிக்கல் நிறைந்தது என்பது அநுபவசாலிகளுக்குத் தெரியும். அரசாங்க வரவு செலவு ஒவ்வொன்றுக்கும் ஆதாரச் சீட்டு (Woucher) ஒன்று இருக்கும். ஆதாரச் சிட்டு என்ற பெயர் உங்களுக் - குப்பிடிக்காவிட்டால் அடையாளச் சீட்டு என்று சொல் கிறேன். அதுவும் பொருத்தமில்லை யென்ருல் ரசீது என்பதை வைத்துக் கொள்ளுங்கள். ரசீது வேறு, இது வேறு என்ருல் வெளசர் என்றே சொல்லிக் கொள்ளுங் கள், அதைப் பற்றி இங்கே விவாதம் வேண்டாம். காரியா, லயங்களிலும், கம்பெனிகளிலும், அரசாங்கத்திலும் வெளசர்களே'க் கொண்டு வரவு செலவை அறிந்து கொள்ளலாம். சரி பார்க்கலாம். வீட்டுக் கணக்கிலே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/93&oldid=685999" இலிருந்து மீள்விக்கப்பட்டது