பக்கம்:சுதந்திரமா.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சுதந்தரமா!

மறந்துபோய் வாழைப்பழம் என்றேன் ” என்று சமா தானம் சொல்வான். அவனிடமிருந்து உண்மையை வருவித்துவிட வேண்டுமென்று நமக்கு ஆசை. மறுபடி கேள்வி போடுகிருேம். பேரிக்காய் கடற்கரையில் விற்கிருர்களா ?” என்று கேட்கிருேம். அவன், ' இன்று புதிதாக வந்தது ; அதனுல்தான் வாங்கினேன் ' என்று நம்முடைய கேள்வியின் பலத்தைக் கொண்டே சமாளித்து விடுகிருன். நமக்கு உண்மையாகக் கணக்கு எழுதவேண்டு மென்ற ஆசை. உண்மையை எழுதுவதில் சங்கடம் இல்லை. 'கடற்கரையில் பையனுடைய செலவு அரையணு என்று எழுதுவது நூற்றுக்கு நூறு உண்மைதான். ஆனல் காம் உண்மையைத் தெளிவாக எழுதவேண்டும் என்று விரும்பு கிருேம். இந்த முயற்சியில் பையனுக்குப் பொய் சொல்லக் கற்றுக் கொடுக்கிருேம். - - .

இன்ன பண்டத்துக்காகச் செலவழிந்தது என்பது தெரியவேண்டும் என்று நினைக்கிருேம். எதற்கு அது தெரியவேண்டும் ?-அதுதான் நமக்கே தெரியவில்லை. ஒரு வருஷத்தில் கம்முடைய பிள்ளையாண்டான் எத்தன்ன ரூபாய்க்கு கிலக்கட்லேயும், எத்தனை ரூபாய்க்குப் பட்டா னிக் கடலையும், எத்தனே ரூபாய்க்குச் சாக்கொலேட்டும் வாங்கி யிருக்கிருன் என்று ஒட்டு மொத்தக் கணக்குப் போடப் போகிருேமா? நிலக்கடலயை ஒரு பையன் ஒரு மாதத்துக்கு இவ்வளவு வாங்கினல், ஊரில் வாழும் இத்தனை சிறுவர்கள் இவ்வளவு வாங்குவார்கள் என்று புள்ளிக் கணக்கைத் தயார் செய்யப் போகிருேமா? அது ஒன்றும் இல்லை. நாம் வீட்டுக் கணக்கு எழுதுகிருேம். அது பெரிய சாதன. அதை நன்ருக விவரமாக, தெளிவாக எழுதி விட்டோம் என்ற திருப்தி வரவேண்டுமே, அதற் காகத்தான் இவ்வளவு சிரமப்படுகிருேம்; மற்றவர்களையும் சிர்மத்துக்கு உள்ளர்க்குகிருேம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/96&oldid=686002" இலிருந்து மீள்விக்கப்பட்டது