பக்கம்:சுதந்திரமா.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீட்டுக் கணக்த் 89. எங்கள் விட்டுக் கணக்கை நான் எழுதி வந்தேன். எங்கள் வீட்டுக் குழந்தைகளின் செலவை எழுதுவதில் எனக்குச் சங்கடம் ஏற்படவில்லை. என் மனைவி செய்யும் செலவைக் கேட்டு எழுதும் வகையில்தான் நான் அற்புத மான அதுபவங்களைப் பெற்றேன். கணக்கு எழுத ஆரம் பித்தபோது, கணக்கை எப்போது எழுதுவது என்ற கேள்வி எழுந்தது. முதல் நாள் கணக்கை மறுநாள் கால்யில் எழுதுவது என்று சொன்னுள் என் மனைவி. " காலேயில் உட்கார்ந்து கொண்டு எழுத முடியாது. யாராவது பார்க்க வருவார்கள். அந்தச் சமயத்தில், விளக்கு மாறு எத்தனைக்கு வாங்கிய்ை என்று கேட்கலாமா? படுத்துக் கொள்வதற்கு முன்பு எழுதுவதுதான் சரி ' என்று கான் சொன்னேன். ஆமாம் மறுநாள் கணக்கு மறந்தாலும் மறந்துபோகும். அன்றன்று எழுதுவது சுலபக் தான்" என்று என் மனைவி இப்போது எனக்குத் தாளம் போட்டாள். - -

- சில நாட்கள் ஒழுங்காகக் கணக்கை எழுதி வந்தேன். மாச ஆரம்பத்தில்தான் செலவுக் கணக்கு அதிகமாக இருக்கும். வீட்டு வாடகை, பால்காரன், டாக்டர், வெற் றிலக்காரன், பள்ளிக்கூடச் சம்பளம் முதலிய மொத்தக் கண்க்கெல்லாம் முதல் வாரத்திலே வந்துவிடுகின்றன. இன்ன இன்ன் வகையிலே மொத்தச் செலவு ஆகிறது. என்பது வழக்கமாகிவிட்டபடியால் அந்தக் கணக்கு எழுது வதில் சிக்கல் ஒன்றும் ஏற்படவில்லை. ஆனல் மற்ற காட் களில் ஆகிற செலவு இருக்கிறதே. அதுதான் ஒருவகையில் அடங்குகிறதில்லை பலபட்டடையாக இருக்கிறது. என். மனைவி புடைவைக் கடைக்குப் போய் வந்தால் பில் கொண்டு வருவாள் ; அதோடு பூ வாங்கின கணக்கை ஞாப கம் வைத்துக் கொண்டு சொல்வாள். கடையில் ஏதேனும் வாங்கிலுைம் கூடிய வரைக்கும் கினைவுபடுத்திக் கொண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/97&oldid=686003" இலிருந்து மீள்விக்கப்பட்டது