பக்கம்:சுதந்திரமா.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சுதந்தரமா !

சொல்வாள். ஆனல் அவளும் சில சமயங்களில் கணக்குச் சொல்ல முடியாமல் விழிப்பதுண்டு. - -

அன்று ஐம்பது ரூபாய் எடுத்துகொண்டு போளுள். யாருடைய கல்யாணத்துக்கோ வெள்ளித் தம்ளரும் ஒரு ரவிக்கைத் துண்டும் வாங்கி வரலாம் என்று பணம் வாங் கிக்கொண்டாள். -

'இதற்கு ஐம்பது ரூபாய் எதற்கு?" என்று கேட்டேன். -

"எதற்கும் கையிலே இருக்கட்டுமென்றுதான் கேட் கிறேன்" என்ருள் அவள். - х

"ஒரு வெள்ளித் தம்ளருக்கும் ரவிக்கைத் துண்டுக்கும் அதிகமாகப் போனல் இருபது, இருபத்தைந்து ரூபாய்க்கு மேல் வேண்டாம்" என்று சொன்னேன். :

'கான் வாங்கினதற்கு உங்களிடம் கணக்கு ஒப்பிக் காமலா இருக்கப் போகிறேன்? தம்பிடி தம்பிடியாகக் கணக்குப் பண்ணிக்கொண்டுதான் கடைக்குப் பணம் எடுத்துக்கொண்டு போவார்களா?' என்று கேட்டாள்.

"நான் தம்பிடியைக் கணக்குப் பண்ணவில்லையே? இருபது ரூபாய்க்கும் ஐம்பது ரூபாய்க்கும் உள்ள வித்தி யாசத்தையே எடுத்துக் காட்டினேன்.

" சரி, சரி, நான் பணம் கேட்டால் உங்களுக்குக் கொடுக்க மனசு வராது. வழியிலே போகிறவன் வந்து பல் இளித்தால் ஐம்பது நூறு தூக்கிக் கொடுத்துவிடுவீர் கள். எனக்கு என்ன பாடு? நீங்களே கடைக்குப் போய் உங்கள் சிநேகிதர் வீட்டுக் கல்யாணத்துக்கு வரிசைப் பண்டங்களே எடுத்து வாருங்கள்” என்று கோபக் கனல் வார்த்தைகளிலே அள்ளி வீசிள்ை. -

கடைக்குப் போவதற்கும். எனக்கும் வெகு து

வைக் கடையில் போய் நின்றுகொண்டு, ரவிக்ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/98&oldid=686004" இலிருந்து மீள்விக்கப்பட்டது