பக்கம்:சுதந்திரமா.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீட்டுக் கணக்கு 9 :

துணி எடுங்கள்” என்று ஆண் மகனுகிய கான் கேட்பதா அதை நினைக்கும்போதே எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. - .

ஆகவே, 'உனக்கு ஐம்பது ரூபாய் கொடுப்பதற்காக நான் சொல்லவில்லை. பணத்தைக் கொண்டுபோய்விட்டுப் பாதியைத் திருப்பிக் கொண்டுவருவானேன்? வேண்டிய தைக் கொண்டுபோய்ச் சாமானே வாங்கிக் கொண்டு வரலாமே என்ற எண்ணத்தால் சொன்னேன். ஐம்பது ரூபாய் கொண்டுபோ; நூறுதான் கொண்டுபோ. எனக்கு உன்னிடத்தில் அவநம்பிக்கையா, அதை எடுத்துக்கொண்டு ஓடிப் போய்விடுவாய் என்று?" என்று சிரித்துக்கொண்டே கேட்டேன். w

அவள் கோபம் உடனே மறைந்தது. காணம் வந்து விட்டது. "ஆமாம், உங்களுக்கு எப்போதும் பரிகாசக் தான்' என்று அவளும் புன்முறுவல் பூத்தாள்.

எப்படியோ, அவள்தான் வெற்றி பெற்ருள். ஐம்பது ரூபாயை எடுத்துக் கொண்டு கடைக்குப் போனள். நான் மாலையில் வீட்டுக்கு வந்தேன். அவள் இன்னும் கடையி லிருந்து வரவில்லை. ஒரு நண்பரைப் பார்க்கப் போய்விட்டு இரவு எட்டு மணிக்கு வந்தேன். என் மனேவியிடம், "என்ன, எல்லாம் வாங்கியைா?" என்று கேட்டேன். +

"வாங்கியிருக்கிறேன். அதைப்பற்றி அப்புறம் சொல் கிறேன். நீங்கள் சாப்பிடுங்கள்" என்ருள். -

சாப்பிட்டாயிற்று. வீட்டுக் கணக்கை எழுத உட் கார்ந்துகொண்டேன். 'இன்று எத்தனே ரூபாய் செலவு பண்ணிய்ை ஐம்பது ரூபாயையும் செலவு பண்ணிவிட்டா யல்லவா?" என்று அவளக் கேட்டேன்.

"உங்களுக்கு எப்படி ஜோசியம் தெரிகிறது: என்ருள். - ". . . . . . o. 3's

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/99&oldid=686005" இலிருந்து மீள்விக்கப்பட்டது