பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 அழைக்கின் ருர் அடிகள். 'மூலபண்டாரம் வழங்கு கின்ருன் வந்துமுந்துமின்’ என்றவாறுபோல "திரு வருளைப் பெறுவதற்கு ஏற்ற தருணம் இதுவே , வம்மின் உலகியலிர் ” என்று அழைக்கின்றனர். இறைவன் திருவருள் சுவாமிகளின் உடம்பில் எவ்வாறு காரியப்பட்டது ? அடிகளின் பூதவுடல் எவ்வாறு பொன் வடிவாக மாறிற்று ? ம | றி ய அவ்வுரு என்னவாயிற்று ? எங்கே போயிற்று ? என்ற விளுக்களுக்கெல்லாம் அடிகள் விடை தந்துள்ளனர். அடிகளின் விடையை ஒருவாறு விளக்குவாம். مسیر எல்லாம்வல்ல முழுமுதல் தெய்வத்தைப் பாடியும், பரவியும், ஆடியும், அரற்றியும் நெஞ் சுருக, நைந்துருக, கசிந்துருக, கரைந்துருக, கனிந் துருக அருட்பெருஞ்சோதி ஆண்டவன் அவர் கருத்தினுாடே ஒளிகாட்டி அருளுகின்றன். மெய் யுணர்ச்சி ஓங்கும்; உடம்பு, உயிர், உளம் எல்லாம் ஒளிமயமாகும். கையுறைந்து வளர்நெல்லிக் கனியே உள்ளம் கரைந்துகரைந் துருகஅவர் கருத்தி னுாடே உய்யுநெறி ஒளிகாட்டி வெளியு முள்ளும் ஓங்குகின்ற சுயஞ்சுடரே உண்மைத் தேவே. -திரு. 15:52 இம்மெய்யுணர்ச்சியின் இயல்பையும், இதனை வேட்டுநின்ற நிலையையும் அ டி க ள் விளக்கு கின்றனர்.