பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 திருக்கதவந் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே திருவருளாம் பெருஞ்ஜோதித் திருவுருக்காட் டாயோ உருக்கியமு தூற்றெடுத்தென் உடம்புயிரோடு உளமும் ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சியரு ளாயோ -திரு. 6. 19: ! என்றவதனுல் உடம்பு, உயிர், உளம் எல்லாம் திருவருளாம் பெருஞ்சோதியினுல் ஒளிமயமாகு மென்றது வலியுறும். ஆண்டவனது அருள் ஒளி யின் ஒரு சிறு கூறு, ஒவ்வோர் உயிரிலும் இருக் கின்றது. இந்தச் சிறிய ஒளி ெய ரி ய ஒளியாக வேண்டுமென்பதை முன்னர்க் கூறினும். இவ் வொளி உயிரின் கண் உயிராயும், உணர்வாயும் இருக்கின்றது. மற்று, இவ்வொளியினுல் உயிர்வளர் கின்றது என்றும், உயிருள் உயிராக இவ்வொளி வளர்கின்றதென்றும் கூறலாம். ஒளியான உயிரின் கண் உ ண ர் வு உண்டாகும். இவ்வுணர்வுள் உணர்வாகி, இவ்வுள்ளுணர்விற் பற்றி வயங்கும் ஒளியாக ஆண்டவன் திருவருள் காரியப்படும். இவ் வொளியின் ஒளியாகவும், ஒளியுள் ஒளியாகவும் அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங் கருணையே ஆகிய உள்ளத்தில் நிறைந்துவரும். இப்பேருண்மையினை நம்பெருமானுகிய இராம லிங்க அடிகள், - o உயிராய் உயிர்க்குளுறு முயிராகி உணர்வாகி உணர்வுளுணர் வாகி உணர்வுட் பற்றிஇயலு மொளியாகி ஒளியின் ஒளி யாகி - -திரு. 6: 100:15, என்றும்,