பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 திலும், அருள் ஒளியாக அறிவிலும் விரித்தருளப் படும் என்பர். கதிர்நல மென்னிரு கண்களிற் கொடுத்தே அதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி அருளொளி என்றணி அறிவினில் விரித்தே அருள்நெறி விளக்கெனு மருட்பெருஞ் ஜோதி பரையொளி என்மனப் பதியினில் விரித்தே அரசது இயற்றெனு மருட்பெருஞ் ஜோதி -திரு. 6 : 273-78 கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான் என் எண்ணிற் கலந்தே யிருக்கின்ருன்-பண்ணிற் கலந்தான் என் பாட்டிற் கலந்தா னுயிரிற் கலந்தான் கருணை கலந்து -திரு. 6: 109: 1 இந்த அருள் ஒளியைப் பெற்றுக்கொள்வதற்கு, * நமது புருவ மத்தியில் வெண் டாமரை மலர் மலர்ந்திருப்பதாக, அதன் மத்தியில் ஓங்கார வடிவ மாய் ஒரு பீடம் இருப்பதாக, அதன் மத்தியில் அசையாது விளங்குகின்ற ஒரு கற்பூரதீபம் இருப்ப தாக, அந்தத் தீப நடுவில் கடவுள் இருப்பதாகப் பாவித்துக்கொண்டு சிவாய நம’ என்று நாவசை யாமல் நிலைக்கவேண்டும். சுத்த சன்மார்க்க சித்திகள் எல்லாம் கிடைக்கும். இதை நம்ப வேண்டும் ” என்று உபதேசம் செய்தருளி யிருக்கின்ருர், இங்ங்னம் தி லே ப் ப த ற் குத் தொடங்கும்போது புறத்தில் திருவிளக்கு வைத்துக் கொள்ளுதல் துணைசெய்யும். ஒருசில நாட்களில்