பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 அவரவர் வல்லபத்திற்கேற்ப ஆண்டவன் ஒளி யளித்து உதவுகின் ருன். அடிக்கடிஎன் னகத்தினிலும் புறத்தினிலும் ஜோதி அருளுருவாய்த் திரிந்துதிரிந் தருள்கின்ற பொருளே -திரு. 6: 38: 24 என்று கூறிய அ னு ப வ ம் கைகூடும். இந்த அனுபவம் சன்மார்க்கசீலர்களின் வல்லபத்தைப் பொறுத்து ஏறியும், இறங்கியும், நிலைத்தும், சிறிது வேறுபட்டும் உள்ளதென்பர். சுவாமிகள் கையற அவிலாத நடுக்கண்புருவப்பூட்டைத் திறந்து, “கண் களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக் கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்’கைக் கண்டு களிக்கச் சொல்கின் ருர் (திரு. 6: 38: 19). ஈசனரு ளாற்கடலில் ஏற்றதொரு வோடம் ஏறிக்கரை யேறினேன் இருந்ததொரு மாடம் தேசுறுமம் மாடநடுத் தெய்வமணிப் பீடம் திபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம் -திரு. 6. 168: 4 என்று அ டி க ள் இந்த அனுபவத்தைக் குறிப் பிடுவதுகொண்டு நெற்றிக்கு நேரே நிறைந்த ஒளி கண்டனர் என்று அறியலாம். இதனைக் காணப் பெறும் சாதகனுடைய உடலில் உள்ள அசுத்த பூதகாரிய அணு க் கள் சுத்தபூதகாரிய அணுக் களாக மாறும். அப்போது அசுத்த தேகமெனப் படும் அழியுமிவ்வுடல் அழியாப் பொன்னுருவாகிப் பொலியும். அப்போதுதான் மரணத்தைத் தவிர்க்க