பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 முடியும். ஆன்மலாபம் பெற இயலும். இதைக் கூறி வாய்ப்பறை ஆர்க்கின்றனர் அடிகள். வையகத்திர் வானகத்திர் மற்றகத்தீர் நுமது வாழ்க்கையெலாம் வாழ்க்கையென மதித்துமயங் காதீர் மையகத்தே யுறுமரண வாதனையைத் தவிர்த்த வாழ்க்கையதே வாழ்க்கையென மதித்ததனைப் பெறவே மெய்யகத்தே விரும்பியிங்கே வந்திடுமின் -திரு. 6: 108; 9 இந்த அருளொளியைக் க ண் ட ஞானியர் களும், காண விழைந்தவர்களும் இந்நிலையைப் போற்றிச் சிறப்பித்துக் கூறுகின்றனர். நெற்றிக்கு நேரே நிறைந்த ஒளிகாணில் முற்று மழியா துடம்பு புருவத் திடையிருந்து புணணியனைக் காணில் உருவற்று நிற்கு முடம்பு கண்டத் தளவில் கடிய வொளிகானில் அண்டத்த ராகு முடம்பு - - -ஒளவைககுறள விளக்கினை யேற்றி வெளியை அறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள் விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே -திருமந்திரம் 1818 பற்றி னுள்ளே பரமாய் பரஞ்சுடர் முற்றினு முற்றி முளைக்கின்ற மூன்ருெளி நெற்றியி னுள்ளே நினைவாய் நிலைதரு மற்றவ ய்ைநின்ற மாதவன் தானே -திருமந்திரம் 3031