பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 அன்பையும் விளை வித் தருட்பே ரொளியால் . இன்பையும் நிறைவித் தென்னையு நின்னையும் ஒருரு வாக்கியா னுன்னிய படியெலாஞ் சீருறச் செய்துயிர்த் திரம்பெற அழியா அருளமு தளித்தனை அருள்நிலை ஏற்றனை அருளறி வளித்தனை அருட்பெருஞ் ஜோதி -திரு. 6: 1: 1561-1574 என்று விளக்கியுள்ளார். மேலும், இந்நிலையனுபவத்தைத் தம்முடலிற் கண்டவண்ணம் அடிகள் அருளிச்செய்கின்றனர். சன்மார்க்கத்தில் கூறப்படும் அனுபவங்கள் அந் நெறிநிற்கும் சாதகனுடைய உடம்பில் தெரிய வேண்டும். எத்துணைப்பெரிய ஆராய்ச்சியாயினும், எத்துணைப்பெரிய வா ச் சி ய விளக்கமாயினும், கேட்டார்ப் பிணிக்கும் எத்துணைப் பெரிய சொற். பொழிவாயினும், தினத்துளி அனுபவம் இல்லா விடில் எல்லாம் நாடக நிகழ்ச்சியான ஆரவார மாக முடியும். ஓர் நாள் சுவாமிகளிடம் ஒரன்பர் சென்று திருவருட்பாவிலுள்ள பாட்டு ஒன்றை இசையுடன் பாடினர். இசை நுணுக்கஞ்செறிந்த அப்பாட்டைக் கேட்ட அடிகள், “ பாடினுல் போதாது; பொருள் தெரியவேண்டும்” என்றனர். பின்னர் ஒரு கால் திருவருட்பாவில் உள்ள மகாதேவமாலைச் செய்யுள் ஒன்றுக்கு அடிகள் கூறும் விளக்கத்தை நன்கறிந் திருந்த அன்பர் ஒருவர். சுவாமிகளிடம் அப் பாட்டிற்கு விரிவுரை செய்தனர். கேட்டு மகிழ்ந்த