பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 அடிகள், பொருள் தெரிந்தால் ேப ா த ா து; அனுபவம் வரவேண்டும் ’ என்று அன்புடன் அறிவுறுத்தினர். இந் நிகழ்ச்சிகளுக்கு அகச் சான்று எதுவுமில்லை. இது செவிவழிச்செய்தியே யாயினும், உலகவர் அனைவரையும் சன் மார்க்கத் தில் அடைவித்திடத் தோன்றிய வள் ளற்பெருமான் வந்த அந்த அன்பர் சன் மார்க்க அனுபவம் பெற வேண்டும் என்று விழைந்த உண்மை புலப்படு கின்றது. சாவாத உடம்பு பெற்ற அடிகள் எப்படி அதனைப் பெற்ருர் என்றும் அவரது பூத உடம்பு பொன் னுடம்பாவதற்கு உண்டான அனுபவங்கள் யாவை என்றும் காண்போம். சுவாமிகளின் பூதவுடல் பொன் னுடலாக, அ ன் பு ரு வ மா. க மாறும்போது உண்டான அனுபவங்களை அடிகள் அழகாக விரித்துரைக் கின் ருர், வன் தோல், மென் தோல், புடைத்தோல் முதலிய தோலெல்லாம் குழையும்; நரம்புகள் அனைத்தும் கட்டுவிட்டு இயங்கும்; இருவகையான எலும்பு . ஞம் உருகி நெகிழ்ந்திடும்; த ைச க ள் எல்லாம் தளர்ந்துபோம்; உடலிலுள்ள இரத்தம் அ&னத்தும் உள்ளே இறுகிவிடும்; சுக்கிலம் உரத்து பந்தித்து ஒருதிரளாகிவிடும் ; மூவகை மூளைகளும் மலர்ந்திடும்; உடம்பு முழுதும் அமுதம் ஊற் றெடுத்து ஒடி நிரம்பிடும்; நெற்றிவியர்க்கும்; முகத் தில் ஒளிமலரும்; மூச்சுக்காற்று குளிர்ச்சி பொருந்தி யிருக்கும்; சாந்தம் ததும்பிடும்; உள்ளத்தில் நகை