பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 விரைந்து விரைந்து படிகடந்தேன் மேற்பா லமுதம் வியந்துண்டேன் கரைந்து கரைந்து மனமுருகக் கண்ணிர் பெருகக் கருத்தலர்ந்தே வரைந்து ஞான மணம்பொங்க மணிமன் றரசைக் கண்டுகொண்டேன் திரைந்து நெகிழ்ந்த தோலுடம்புஞ் செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே -திரு. 6: 93: 6 தன்னையே எனக்குத் தந்தரு ளொளியால் என்னை வேதித்த என்தனி யன்பே -திரு: 6:1; 1480 பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டாய் என்னுளங் கலந்த என்தனி அன்பே -திரு. 6:1; 1489 அருட்ஜோதிகொண்டு அன்புருவான அடிகள் உயிரனுபவம் பெற்று அருட்பெருஞ்ஜோதி ஆண்ட வனது பெருமையை உண்மையில் உணர்ந்து அரு ளுருவம் பெறுவதற்காக மீண்டும் பாடி வணங்கத் தலைப்படுகின் ருர். o பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப்புளகம் போர்த்தேன் என் உள்ளமெலாம் பூரித்தேன் ஆர்த்தே நின்(று) ஆடுகின்றேன் பாடுகின்றேன் அன்புருவா னேன்.அருளை நாடுகின்றேன் சிற்சபையை நான் H. o -திரு. 6: 71: 6 என்றும்,