பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 என்புநைந் துருகி நெக்குநெக்கு ஏங்கி அன்பெனு மாறு கரையது புரள நன் புலன் ஒன்றி நாதவென் றரற்றி உரைதடு மாறி உரோமஞ் சிலிர்ப்பக் கரமலர் மொட்டித் திருதய மலரக் கண்களி கூர நுண்துளி அரும்பச் சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர் தாயே யாகி வளர்த்தனை போற்றி என்றும், அற்புத மான அமுத தாரைகள் எற்புத் துளை தொறு மேற்றினன் உருகுவது உள்ளங்கொண் டோர்.உருச் செய்தாங்கு எனக்கு அள்ளு ருக்கை அமைத்தனன் என்றும் வரும் திருவாசகங் காண்க. மணிவாசகப் பெருமான் பெற்ற அன்புருவத்தை உருகுவதே தொழிலாகக் கொண்ட உள்ளமுடைய ஒர் உருவம் என்று கூறலாம். அன்புருவத்தைப்பற்றிப் பேசுங்கால் அன்பின் திருவுருவாக நின்ற கண்ணப்பரைப்பற்றி ஒன்று சொல்லவேண்டும். நாள் தோறு ம் வழிபாடு செய்துவந்த அந் த ண ர் காளத்திநாதனுக்கு முன்னே இறைச்சி எலும்புடன் இலையும், செருப்படியும், நாயடியும் கண் டு பொருது அவற்றை நீக்கித் தமது முறைப்படி மீண்டும் மீண்டும் அருச்சித்து வந்தார். கண்ணப்பரது ஆரா அன்பை அறியாத அந்தணர் அவரை ஒழித்தருள வேண்டுமென்று ஆ ண் ட வனே