பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 வேண்டினர். அதற்கு ஆண்டவன் கண்ணப்ப ருடைய அன் பின் பெருமையை அவர்க்கு அறிவிக் கின் ருன். அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும் அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் . . அறிவென்றும் அவனுடைய செயலெல்லாம் நமக்கினியே = வாமஎனறும அவனுடைய நிலை இவ்வா றறிநீயென் றருள் செய்தார் -பெரியபுராணம் ஆண்டவனது வ டி வு கண்டமாத்திரத்தில் அன்பே வடிவாகிநின்ற கண்ணப்பர் தமது இரண்டாவது கண்ணேயிடந்து நிற்கும்போது ஆண்டவன் தனது உண்மை ஞான உருவிற் ருேன்றி, நில்லு கண்ணப்ப ! நில்லு கண்ணப்ப ! என் அன்புடைத்தோன்றல் நில்லு கண்ணப்ப ! ’’ என்று கூறி அவரை ஆட்கொண்டருளினுன். அன்பே உருவமாகி நின்றதற்குக் கண்ணப்பர் நல்லதொரு சான்ருவர். எனவே, அன்புருவம் பெற்ற அடிகள் அடுத்து அருளுருவம் பெற்ற அனுபவங்களையும் அவ்வருள் உருவத்தின் இயல்புகளையும் அவர் வாய்மொழி கொண்டு விளக்கப் புகுவாம். அருளுருவெனப்படும் பிரணவ தேகம் அருளுருவத்தை மந்திரவடிவென்றும் ஒமயத் திருவுரு என்றும் ஒளிவடிவமென்றுங் கூறுவர்.