பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 உள்ளகத் தமர்ந்தெனது உயிரிற் கலந்தருள் வள்ளல்சிற் றம்பலம் வளர்சிவ பதியே -திரு. 6 : 1 : 101.9 எனக் கூறுவதை உற்றுநோக்கினுல் அருட்பெருஞ் ஜோதியாகிய ஆண்டவன், அருளுருவ நிலையில் உயிரிற்கலந்து ஒன்ருகி இன்பந்தருவான் என்பது பெறப்படும். எனினும், திருவருட்பேறு பெற்ற அடிகள், சிற்றம்பலவா ! உ&னப் பாடியாடும் வண்ணம் சாற்றுக' என்று வேண்டிக் கொள் கின் ருர். மேலும், ஆரா வமுத மளித்தருளி யன்பா லின்ப நிலைக்கேற்றிச் சீரார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை யாக்கினையே ஏரா ரின்ப வனுபவங்க ளெல்லாம் பொருந்தியிருக் கின்றேன் திரா வுலகி லடிச்சிறியேன் செய்யும் பணியைத் தெரித்தருளே -திரு. 6 : 63 : 9 என்றும் வேண்டி அருளின் திறம் போற்றிப் பாடிப் பரவுகின் ருர். ஞானதேகம் எனப்படும் இன்புருவம் 'அருளே தந்தனையே யருளா ரமுதந் தனேயே’ என்று பாடி உயிர்களுக்கு உற்ற இடையூறுகளேத் தவிர்த்துப் பணிசெய்யும் அடிகள் சிறிதுகாலம் அருளுருவில் எல்லாருங் காண வாழ்ந்திருக்க வேண்டும். அருளுருவம் இன் புருவமாவதற்கு இரண்டரை நாழிகை வேண்டும்போலும். இதனே வான் வடிவம் என்றும், ஞானதேகம் என்றும், சிவவடிவம் என்றுங் கூருநிற்பர். ஆண்டவனிடம்