பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 தீதுமுழு துந்தவிர்த்தே சித்தியெலா மளிக்கத் திருவருளாம் பெருஞ்ஜோதி யப்பன்வரு தருணம் ஈதிதுவே யென்றுலக மறியவிரைந் துரைப்பாய் எல்லாருங் களிப்படைந்துள் ளிசைந்தேத்தி யிடவே -திரு. 6: 105:9 அன்புடை மகனே மெய்யருட் டிருவை யண்டர்கள் வியப்புற நினக்கே இன்புடை யுரிமை மணம்புரி விப்பாம் இரண்டரைக் கடிகையில் விரைந்தே துன்புடை யவைகள் முழுவதுந் தவிர்த்தே துாய்மைசேர் நன்மணக் கோலம் பொன்புடை விளங்கப் புனைந்துகொள் என்ருர் பொது நடம் புரிகின்ருர் தாமே -திரு. 6: 103:3 ஞான உருவடைந்த பெற்றியையும் அடிகள் விளக்கியுள்ளார். ' மெய்ஞ்ஞான உருவடைந்தேன்' -திரு. 6. 132:79 நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால் நானே அருட்சத்தி நாடடைந்தேன்-நானே அழியா வடிவ மவைமூன்றும் பெற்றேன் இழியாம லாடுகின்றே னிங்கு -திரு. 6: 109:27 நாடல்செய் கின்றேன் அருட்பெருஞ் ஜோதி நாதனை யென்னுளே கண்டு கடல்செய் கின்றேன் எண்ணிய எல்லாங் கூடியே குலவியின் புருவாய் ஆடல்செய் கின்றேன் --திரு. 6: 72:6