பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 இல்லை. கண்டதே காட்சி, கொண்டதே கோலம், ஏதோ பிறந்தோம், வாழ்கிருேம்; ஒருநாள் இறந் தொழிவோம், இது ேவ உலகியல் வாழ்க்கை என்று சாமாறே விரைகின்றது உலகம். பொன்னும், பொருளும், புகழும், போகமும் விரும்பி ஓயாது உழன்று, அவற்றில் கண்ணுங் கருத்துமாக இருக் கின்ற ம க் க 2ள த் தா ன் நாம் காண் கின் ருேம். எனினும், ஒன்று என்று இரு; தெய்வம் உண்டு என்று இரு; பசித்தோர் முகம் பார் என்ற உப தேசத்தையுட்கொண்டு வாழ்பவர்களும் உலகத் தியல்பையும் உயிர்களின் இயல்பையும், உயிர்கள் உலகில் இன் புற்று வாழ்வதற்குப் படும் துன்பத்தை யும் ஒருவாறு உணர்ந்து பசி, பிணி, பகைகளினலே உயிர்களுக்கு வரும் இடையூறுகளைத் தம்மால் இயன்றமட்டில் வி ல க் கி த் தெய்வநினைவுடன் வாழும் நல்லவர்களும் இருக்கின்றனர். இவர்கள் நிலையில்லாத பொருள்களுக்கும் நிலத்த பொருள்களுக்கும் வேறுபாடு விளங்கிய அறிவுடையவர்கள். பதி, பசு, பாச இயல்புகளே உண்மையில் உணர்ந்து எதையும் பற்றற நுகர்ந் திருப்பர். இவர்களது சாதாரண விழிப்புணர்வு சீவசாக்கிரம் எனப்படும். இந்நிலையில் நின்று திரு வருள் துணையால் மேல்நிலையை விரும்பிநிற்கும் சாதகனுக்கு அருளலாது எதுவும் பொருளாகத் தோன் ருது. உலகமெல்லாம் தன் கீழ் வருவதா யினும், போகமெல்லாம் அவனுக்குக் காத்துக் கிடப்பினும், பொற்குவியலும் பொருள் வைப்பும் அவன் வயமாயினும் இவையனைத்தையும் பொருட்