பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 வினை மேலும் விளைய வழியில்லை. தன் முனைப்பில் லாது மனமடங்கியபோது ஆணவமல வீக்கமும், ஆகாமிய கர்மமும் இல்லாதுபோகும். பலப்பல பிறவிகள் தோறும் தொடர்ந்துவந்த அசுத்தமாயை இந்நிலையில் விலகுவதால் அருள் ஒளி ஏகதேச மாக வெளிப்படும். தெய்வநினைவில் தி ளே த் து ஆண்டவன் பால் அன்பு பெருகும். அருளறிவு வளரும். அருள் ஒளியின் ஏகதேசத்தைக் காண் பான். ஏதோ என்றுமில்லாத புத்துணர்வு தோன்ற அதை அனுபவித்து மகிழ்வான். இதற்குச் சீவ துரியம் என்று பெயர். இந் நி லே யி ல் மனம் நாபியில் நிற்கும். இவை நான்கும் கீழாலவத்தை என வும் கூறப் படும். இந்த அவத்தைகளுக்கு உட்பட்டவர்கள் ஏனைய மக்களைக்காட்டிலும் அறிவு விளங்கிய வர்கள். எதையும் ஊன்றி விசாரித்து உண்மை காணுபவர்கள். எ ல் லா ப் பொருள்களுக்கும், எல்லாச் செயல்களுக்கும், எல்லாப் பண்புகளுக் கும் மற்றெல்லாவற்றிற்கும் முதற் காரணமாக உள்ள இறைவனே எப்போதும் நெஞ்சில் வைத்த வர்கள். இவர்களைத் தத்துவத்துரிசு நீங்கிய, தத்துவவிளக்கம் பெற்ற சத்துவகுணப் பெரியோர் கள் என்று கூறலாம். கல்வி, கேள்வி அறிவு சிறந்து அன்பு, அடக்கம், சால்பு எல் லா ம் பெருகித் துாய்மை, வாய்மை, நல்லொழுக்கம் விளங்க, உயிர்க்கெல்லாம் உதவிசெய்து நல்வாழ்வு வாழ்ந்து வரும் சாதுக்களாய் இருப்பர். - இதற்கும் மேல்நிலை சுத்தசாக்கிரம் எனப்படும். இங்கு மாயா மலமும், சஞ்சித கன்மமும் அகலும்.