பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 அருள் நினைவுடன் துரங்குவான். அறிவற்றநிலை வராது. இதற்குச் சுத்தசுழுத்தி என்று பெயர். இந்நிலையிலிருந்தவண்ணம் தன்னைச் சுற்றிலும் ஒரே வெளிச்சம் இருப்பதாக உணரும் அடுத்த நீலக்கு வருவான். இதற்குச் சுத்ததுரியம் என்று பெயர். அவனுக்குச் சிலேத்தும நாடி இழைந்து ஒடும். உடம்பெல்லாம் வியர்க்கும். கண்களில் நீர் பெருகும். கண்டறியாத இன்ப உணர்ச்சி உண்டாகும். அகமகிழ விழித்தெழுவான். மீண்டும் அந்நிலைக்குப் போக ஆசைப்படுவான். அடுத்த *படிக்கு எடுத்தடிவைப்பான். -- இந்நிலைக்குப் பரசாக்கிரம் என்று பெயர். இந்த நிலையையும், இதன் மேலுள்ள ஒருசில நிலைகளேயும் கண்டறிந்ததாகவும் அவற்றிற்கு மேலுமுள்ள கடவுளேக் காண இயலவில்லை என்றும் உபநிடதங்கள் ஒலமிடுவதாகச் சுவாமிகள் கூறுகின்றனர். இதன் உண்மையைச் சிறிது . காண் பாம். தோன்றுபர சாக்கிரமுங் கண்டோ மந்தச் சொர்ப்பனுமுங் கண்டோமேற் சுழுத்தி கண்டோம் ஆன்றபர துரியநிலை கண்டோ மப்பால் அதுகண்டோ மப்பாலா மதுவுங் கண்டோம் ஏன்ற உப சாந்தநிலை கண்டோ மப்பால் இருந்தநினைக் d ாகிலோ மென்னே யென்று சான்றஉப நிடங்களெலாம் வழுத்த நின்ற தன்மயமே சின்மயமே சகசத் தேவே. -திரு. 1 : 5 : 63 என்று உபநிடதங்களின் இயலாமை கூறப்படும்.