பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 வேதாந்தக் க ள ஞ் சி யங்க ளா க விளங்கும் இவற்றுள் மாண்டுக்கிய உபநிடதம் முதல் முதலாக சாக்கிரம், சொர்ப்பனம், சுழுத்தி, துரியம் ஆகிய அனுபவ நிலைகளைச் சிறப்பித்துக் கூறுகின்றது. (1-12) இந்நிலைகளைத் தவத்திருவாளர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அ வ ர் க ள் தமது மெய்ப் பொருள் நூலில் நன்கு விளக்கியுள்ளனர். " ஜாக்கிரதை என்பது முதல் அவத்தை. இதில் உயிர் உலகத்துப் பொருள்களைப்பற்றிய அறிவு உடையதாக இருக்கும் ; எல்லாவற்றையும் நுகர்ந் திருக்கும். உடலில் அழுந்திய பற்று உடையதாக இருக்கும் ; உடலின் உதவி இந்நிலைக்கு மிக அவசியமானது. இரண்டாவதுநிலை சொர்ப்பனம். இங்கு உயிர் நுணுக்கமான பொருள்களே புலன்வழி நுகரும். சாக்கிரத்தில் அனுபவித்ததை யொட்டி உயிர் தனக்கென்ற ஒரு புது உலகத்தையே அமைத்துக்கொண்டு உடம்பின் உதவியின்றித் தங்குதடையில்லாமல் எங்கும் திரியும். மூன்ருவது நிலைக்குச் சுழுத்தி (சுழுப்தி) என்று பெயர். இந்நிலையில் கனவோ, ஆசையோ இருப்பதில்லை. உயிர் பிரம்மத்துடன் ஏ கதே சமாக ஒன்றி ஆனந்தத்தை அனுபவிக்கும். நல்ல துாக்கத்தில் உள் ள இந்நில் விருப்புகளினலோ உயிருக்கு உண்டாகும் தொல்லைகளினலோ தடைபடுவ தில்லை. எதை எப்படி அனுபவிக்கிருேம் என்று தெரியாத அறிவு நிலைதான் இது. இதனைத் துரங்கும்போதுள்ள அறிவற்ற நிலையென்று சொல்ல முடியாது.