பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 உணரமுடியாத வண்ணம் மாயா தி ைர க ள் மறைத்துவந்தன. அவை விலகியபோது ஆன்ம ஒளி காணப்படும். தன்னை அறிந்து இன்பமுறு வதும் இந்நிலையில்தான். தன் னேயறியாதார் இறை வனே அறிதலில்லை என்பதை, அருளறி யார்தமை யறியார் எம்மையும் பொருளறி யார்எனப் புகன்றமெய்ச் சிவமே -திரு. 6 1 : 993 என வரும் அடிகளில் அறியலாம். உலக நடையில் எழுவதும், விழுவதும், இறங்குவதும், ஏறுவதும், வீனுக எண்ணுவதும்,நண்ணுவதும்,புவனபோகங் கள் யாவினுஞ் சென்று சென்று சுற்றுவதும், சுழலுவதுமாக இருந்த மனம் அடங்கி ஒடுங்கிப் போவது இந்நிலையிலேயே. இவ் விடத்தில் சாதக னுக்கு எல்லாம் ஒளிமயமாகத் தோன்றும். இதற்கு அருட்ஜோதி என்று பெயர். அருட்ஜோதி பெற்ற பரிசுகொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவனது பெருமையை அறிய முனைவான். அருள்ஜோதி அளித்தனையேல் நின்னை க் கண்டுகொள்வேன் ’ என்று கூறி திருவருட் பூரணத்திற்கிரங்கி நிற்கும் சாதகனுக்குப் பிராரத்த கன்மமும் போயகலும். மல பரிபாகம் பெற்ற ஆன்மா திருவருளாகிய திருவடியைக் காணும் பேறு பெறும் இந்நிலைக்குப் பரதுரியா தீதம் என்று பெயர். சிலர் இதை மனம் போ னவிடம் என்பர். ஆனல் மனம் ஆன்ம சிற் சத்தியாக மாறி மூலாதாரத்திற் சென்று அருள் நலந்துய்த்துக் கிடக்கும். இந்திலையில் தத்துவநிலை களே மறைத்துநிற்கும் திரைகள் எல்லாம் நீங்கும்.