பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 சுவாமிகள் இதனை இனித்தநிலை யென்பர். இஃது அருள் வெளியில் நிகழ்வது. இவ்வெளியில் ஆனந்த அ னு ப வ ம் உண்டாகும். சாதகன் தனக்குப் புருவமத்தியில் ஓங்கும் ஒளியருளிய ஒளியை, குருசிவபதியை, ஜோதியுட் ஜோதியின் சொரூபத்தை, அருட்பெருஞ் ஜோதியை அவனரு ளால் கண்டு இன்புறுவான். கண்டேன் அருட்பெருஞ் ஜோதியைக் கண்டுகளி கொண்டேன் சிவானந்தக் கூத்தாடிக் கொண்டிக் - குவலயத்தே தொண்டே திருவம்ப லந்தனக் காற்றிச் சுகவமுதம் உண்டேன் உயிர்தழைத்து ஒங்குகின் றேன்.உள் ளுவப்புறவே -திரு. 6: 85:5 என்பதால் அறிக. அளவைகளனைத்துங் கடந்து நின்ருேங்கும் அருட்பெருஞ்ஜோதியைக் கண்ட அவனுக்குத் திருவருட் சுதந்தரம் கிடைக்க வேண்டும். இ து வு ம் அவனருளாலேதான் கிடைக்கும். திருவருளைச் சுதந்தரமாகப் பெற்ரு லன்றிச் சாதகனுடைய பூதவுடல் சுத்ததேகமாக மாட்டாது. மரணப் பெரும்பிணி வந்தேதீரும். ஆகவே, அருளொளியால் அழியாதோங்கும் வடி வத்தைப் பெறவேண்டும். இதனை யுட்கொண்டு இறைவனது அருள் நடங் காண, அருட்பேறு பெற விரைவான். ஆண்டவனைக் காட்டிக்கொடுத்த திருவருளை நினைந்து அதில் அழுந்திய பற்றுடைய வனுகி அருட்சோதியை இற்றைப்பொழுதே, இக்