பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 சுந்தர வடிவச் ஜோதியாய் விளங்குஞ் சுத்தசன் மார்க்கசற் குருவே தந்தருள் புரிக வரமெலாம் வல்ல தனியருட் ஜோதியை யெனது - சிந்தையிற் புணர்ப்பித் தென்னெடுங் கலந்தே செய்துவித் தருள்கசெய் வகையே +. -திரு. 6 : 14 : 20. சீரிடம் பெறுமோர் திருச்சிற்றம் பலத்தே திகழ்தனித் தந்தையே நின்பாற் சேரிட மறிந்தே சேர்ந்தனன் கருணை செய்தருள் செய்திடத் தாழ்க்கில் யாரிடம் புகுவேன் யார்துணை யென்பேன் யார்க்கெடுத் தென்குறை யிசைப்பேன் போரிட் முடியா திணித்துய ரொடுநான் பொறுக்கலே னருள்கவிப் போதே -திரு. 6 16 : 1. அருள் ஒளிப் பிழம்பினைக் கண்டவன் அவ் வருளே நினைந்து சிவசொர்ப்பனம் சேர்வான். ஆண்டவனைக் கண்ட பெருஞ்சுகத்தைக் கனவில் அனுபவிப்பான். கண்ணுறங்கேன் உறங்கினுமென் கணவரொடு கலக்கும் கனவேகண் டுளமகிழ்வேன் | -திரு. 6:82 2. அருட்பெருமையையும் ஆ ண் ட வன து பெருமையையும் எண்ணி அருளறிவில் நிலைத்துச் சிவசுழுத்தி யென்னும் பெருநிலை புகுவான். அருள்