பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 என்று மகிழ்கின் ருர். உலகுயிர்த்திரளெலாம் ஒளி நெறி பெற்றிடத் த ம க்கு ஐந்தொழிலிந்தான் என்கின் ருர். சிருட்டி முதலேந்தையும் தம் திருக் கடைக் கணிப்பாற் செயவல்ல சுத்தசன்மார்க்க சத்திய ஞானியாகத் தம்மை ஆக்கின்ை என் பார். வகுக்குந்தொழிலே முதலந்தும் நானே புரிகின் றேன் புரிதல் நீயோ நானே நானறியேன் ” என்று கூறி மயங்குகின் ருர். " சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு தேவர்களும் மூவர்களும் பேசுவதுஎன் பேச்சு ' " சிற்பொதுவும் பொற்பொதுவும் நானறிய லாச்சு சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு ” என்று மகிழ்கின் ருர். 'தேவரும் மூவரும் சித்தரும் முத்தரும் யாவரும் பெற்றிடா இயல்பு எனக்கு அளித்தனே' என்று போற்றுவார். துஞ்சும் தம் முடல் துஞ்சாது பொன்னுடம்பாகிப் பொலிந்தது. என் பார். அருளுருவாயிற்று என்று அதிசயிப்பார். இன்ப உருவானேன் என்று இன்புறுவார். அருட் பெருஞ் சோதியைக் கண்டனமென்று களிப்பார். அது தன் னுட் கலந்தது என்று பூரிப்பார். தாம் அதுவான திறம் பேசிச் செம்மாப்பார். இவ்வாறெல்லாம் பாடிய பாக்களும், விண் ணப்பங்களும், விளக்கமும், உபதேசமும் சமரச சுத்த சன்மார்க்கப் பெருநெறியைச் சுற்றிச் சுற். றிப் பிணைத்துக்கொண்டு திருவருட்பாவாக விளங்குகின்றன. ஆண்டவனது புகழ் பாடிய தோத்திரங்களும் பல அன்பர்களுக்கு விளக்கிய