பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சிவநிலையனுபவம் சிவதுரியம் முதலான மேல்நிலைகளில் சிவா னுபவம் பேசப்படும். சுத்த சன்மார்க்கம் இந்நிலையி லிருந்து தொடங்குவதால் இவை சுத்தசன்மார்க்க நிலைகள் என்றுங் கூறப்படும். இவற்றுள் சாதகன் சிவத்தை அனுபவிப்பான். ஆதலின், இவையெல் லாம் சிவநிலையனுபவ மெனப்படும். தத்துவங் களையெல்லாங் கடந்து தத்துவாதீத மேல்நிலையில் சித்திகள் எல்லாம் விளங்கப்பெற்றுச் சிவநிலை தெரிந்திடச் சென்ற தவமுதியோர் தாமும் தம் முணர்வும் ஒருங்குறக் கரைந்துபோயினர் என்று கூறிய அடிகள் அவனருளால் ஒல்லும் வகையெல் லாம் சொல்லுகின்றேன் என்று தமது சுத்த சன்மார்க்கச் சத்திய அனுபவங்களே க் கூறி யுள்ளனர். சிவதுரிய நன்னிலையை உற்ற ஆன்மா சுத்த சன்மார்க்கஞ் சார்ந்து நிற்கும். சிவதுரியத்தைக் குருதுரியம் என்றுங் கூறுவர். ' தத்துவராயர், மு. த் து த் தா ன் ட வர் முதலிய மகான்கள் குருதுரியம் வரையில் சொல்லுவார்கள் ” என்று அ டி க ள் குறிப்பிடுகின்ருர். சுத்தசித்தாந்தம், சுத்தவேதாந்தம் முதலான ஆறந்த அனுபவ நிலைகளை அறிந்தனுபவித்த சுத்த ஞானிகள் சிவநிலை தெரிந்திடச் சென்றனர். சிவத்தோடு ஒத்த அந்நிலையில் அவர்கள் சிவமாகிக் கரைந்து போயினர். சிவத்தை விழுங்கிய அவர்களைச்