பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 சிவம் விழுங்கிநின்றது என்றுங் கூறலாம். மெய் யுணர்ந்த வாதவூர்மலையைச் சுத்த வெளியாக்கிச் சிவம் அதில் கலந்துகொண்டது. இது சிவத் தியல்பு. சரியையில் சரியை முதலான சரியை நிலை நான் கையும், கிரியையில் சரியை முதலான கிரியை நிலை நான்கையும், யோகத்தில் சரியை முதலான யோகநிலை நான்கையும் அடிகள் தனித் தனி கண்டறிந்தனர். ஞானத்திற் சரியை முதலான சிவஞானநிலைகள் நான் கினையும் அருள் ஒளி கொண்டு அறிந்து அதன்மேல் உண்மைநிலையைப் பெற்றனர். அதுபோலவே சி வ சித் தா ந் த ம் முதலான ஆறந்த நிலையனுபவங்களேயும் பெற்ற னர். அதன் பின் ஓங்கும் சிவானுபவத்தால் சமரச சன்மார்க்கம் பெற்று அதனுல் இறவாமையுற்று சுத்த சன்மார்க்க நிலையனுபவங்களையும் பெற்று விளங்குகின்றனர். இதனை, சரியை நிலை நான்கும் ஒரு கிரியை நிலை நான்கும் தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன் உரியசிவ ஞானநிலை நான்கும்.அருள் ஒளியால் ஒன்ருென்ருய் அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன் அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம் ஆறந்த நிலையறிந்தேன் அப்பால் நின் ருேங்கும் பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம் பெற்றேன்.இங் கிறவாமை யுற்றேன் காண் தோழி -திரு. 6: 82; 93 என்றதால் அறியலாம். அன்றியும், “சித்தாந்தம்