152 முடிந்தமுடிவில் தேவரும், மூவரும்,சித்தரும், முத் தரும் யாவரும் பெற்றிடா இயல்பளித்தான் என்றுங் குறிப்பிடுகின் ருர். சன்மார்க்கத்தில் பல அமுதங்கள் சொல்லப் படுகின்றன. அவை இருவகைப்படும். வெளி உலகாகிய அண்டத்தில் கிடைக்கும் அமுதங்கள் ஒரு சில ; நமதுடலாகிய பிண்டத்தில் கிடைப்பன ஒரு சில. அண்டத்தில் அக அமுதம், புறஅமுதம், அகப்புற அமுதம், புறப்புற அமுதம் என நான்கு கூறப்படும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன் அகஅமுதால் சத்திசத்தர்களே அருளினிற் காப்பன் என்றும், அகப்புற அமுதளித்து ஐவராதிகளைக் காப்பனென்றும், புறஅமுதளித்துத் தேவரையெல் லாங் காப்பன் என்றும், புறப்புற அமுதம்பொழிந்து உயிர்களையெல்லாங் காப்பன் என்றுங் கூறுவர். பிண்டத்தில் அருளமுதே முதல் ஐவகையமுதும், இயலமுதே முதல் எழுவகையமுதும், எண்வகை, நவவகை அமுதும் மற்றுள அமுதவகையெலாம் எனக்கே உற்றுணவளித்தருள் ஓங்கு நற்ருயே என் பார். இவற்றிற்கெல்லாம் தலையாயது அருள முதம். இதனே, இன்னரு ளமுதளித்து இறவாத்திறல் புரிந்து என்னை வளர்த்திடும்என் இன்புடைத் தாயே என்று கூறி இதன் சிறப்புகளையும் கூறுகின்ருர். கரும்புறு சாறுங் கனிந்தமுக் கனியில் விரும்புறு மிரதமு மிக்கதீம் பாலும் குணங்கொள் கோற்றேனும் கூட்டியொன் ருக்கி மணங்கொளப் பதஞ்செய் வகையுற வியற்றிய
பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/165
Appearance