பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 செனிப்பிலதாய் எல்லாமாய் அல்லதுவாஞ் சுத்த சிவதுரியா திதத்தே சிவமயமாய் நிறைந்தேன் இனிப்புறுசிற் சபையிறையைப் பெற்றபரி சதல்ை இத்தனையும் பெற்றிங்கே யிருக்கின்றேன் தோழி -திரு. 6:82:96 என்றமை காண்க. சுத்த சிவதுரியாதீத மேல்நிலையில் அடிகள் தமது அனுபவத்தை சி வ ம ய மா கி நிறைதல் என் பார். சிவமயமாகி நிறை தலைப் பலப்பல வகை யால் விளக்கியருளுகின் ருர். 'என்றும் நிலைத்துள்ள நித்தியமான பொன்வடிவும், மந்திரவடிவும், வான் வடிவுங் கொடுத்து எனக்கு மணிமுடி சூட்டின்ை. ஐந்தொழிலும் செய்திடப் பணித்தான். அகம் புறமும் நீக்கமற நி ைற ந் து விளங்குகின்ருன். உன்னுந்தோறும் உள்ளமெலாம் தெள்ளமுதாய்த் தித்தித்துப் பேரொளிப் பிழம்பாய் நிற்கின்ருன்’ என் பார். அவனது புறவண்ணத்தை, செம்பவளத் திருமலையோ! மாணிக்க விளக்கோ !! தெய்வ மர கதத் திரளோ ! செழுநீலப் பொருப்போ ! பம்பு மணி ஒளியோ! நல்ல பசும்பொன்னின் சுடரோ ! படிகவண்ணப் பெருங்காட்சிதானே ’ எ ன் று விளக்குவார். ' பரநாதத்தே பெருஞ்ஜோதிமலை தோன்றிற்று. அதுதான் மாற்றறியாத பொன் ைெளியோ! அவ்வொளிக்குள் ஆடும் வள்ளல் அருள் ஒளியோ! இஃது அதிசயிக்கும் வகை” என்பார். அவர் மேனி விளக்கம் எண்கடந்த மதி, 11