பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 தனித்தலைமைப் பெரும்பதியாகிய பெருங் கருணைக்கடவுள் இயற்கையுண்மையர்; இயற்கை அறிவினர்; இயற்கை யன் பினர்; நிற்குணர்; சிற் குணர்; நித்தியர்; சத்தியர்; ஏகர்; அ .ே ந. க ர்; ஆதியர்; அநாதியர்; அமலர்; அருட்பெருஞ் ஜோதியர்; அற்புதர்; நிரதிசயர்; எல்லாம்வல்லவர்” என்று விளக்கித் தமது அனுபவம் ஒன்றையும் வெளியிடுகின்ருர். ' குறிக்கப்படுதல் முதலிய அளவு கடந்த திருக்குறிப்புத் திருவார்த்தைகளால் சுத்த சன்மார்க்க ஞானிகள் துதித்தும், நினைத்தும், உணர்ந்தும், புணர்ந்தும் அனுபவிக்க விளங்கு கின்ற கடவுள் ' என்று சுத்த சன்மார்க்க ஞானி யாகிய அடிகள், தாம் ஆண்டவனிடம் பெற்ற திருக்குறிப்புத் திருவார்த்தைகளை நினைவுபடுத்திக் கூறுகின் ருர். ' குறிக்கப்படுதல் என்பது ஒரு திருக்குறிப்பு போலும். வள்ளற்பெருமான் திருக்காப்பிட்டுக் கொண்ட அந்நாள் .ெ வ ளி யி ட் ட அற்புதப் பத்திரிகையில், ஆண்டவன் அடிகளுக்கு வெளிப் படுத்திய திருக்குறிப்பு ஒன்று பேசப்படுகின்றது. * இக்காலந் தொடங்கி, அளவு குறிக்கப்படாத நெடுங்காலம், அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகளெல்லாம் விளங்க யாமே அ ம ர் ந் து விளையாடுகின்ரும் என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி’ என்று எழுதியுள்ளார். மேலும், பதிவிளக்கத்தில் அடிகள், அகரநிலை விளங்குசத்த ரனவருக்கு மவர்பால் அமர்ந்தசத்தி மாரவர்க ளனைவருக்கு மவராற்