பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 பகரவரு மண்டவகை யனைத்தினுக்கும் பிண்டப் பகுதிகளங் கனைத்தினுக்கும் பதங்களனைத் தினுக்கும் இகரமுறு முயிரெவைக்குங் கருவிகளங் கெவைக்கும் எப்பொருட்கு மனுபவங்க ளெவைக்குமுத்தி யெவைக்கும் சிகரமுதல் சித்திவகை யெவைக்குமொளி வழங்குந் -- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே &E öJJTIqt, TT" -திரு. 6: 3:1 என்று திருச்சிற்றம்பலந்தனிலே தெய்வ மொன் றுண்டு காண்மின் என் பர். இ. ப் ப ா ட் டி ற் கு விளக்கம்போல ஞானவிண்ணப்பத்தில், "எல்லா சத்திகளுக்கும், எல்லாச் சத்தர்களுக்கும், எல்லா மூர்த்திகளுக்கும், எல்லா மூர்த்தர்களுக்கும், எல்லாத்தேவிகளுக்கும், எல்லாத்தேவர்களுக்கும், எல்லாச் சாதனர்களுக்கும், எல்லாத் தத்துவங் களுக்கும். எல்லாப் பொருள்களுக்கும், எல்லாக் குணங்களுக்கும், எல்லாச் செயல்களுக்கும், எல்லா அனுபவங்களுக்கும், மற்றெல்லாவற்றிற்கும் முதற் காரணமாயும், நிமித்த காரணமாயும், இவையல்ல வாயும் விளங்குவது திருவருட்சமூகம் என்றும், இவைய8னத்திற்கும் ஒளி வழங்குவது திருச்சிற்றம் பலமென்றும் விளக்குகின்றனர். இங்ங்னஞ் சிறப்பிக்கப்படும் திருச்சிற்றம்பலத் தைத் தனி இயற்கை யுண்மை வெளியென்றும், எல்லாம் பெற்ற விளக்கமதாய் விளங்குகின்ற இயற்கை விளக்கமென்றும், இயற்கைத்தனி யின்ப மயம் என்றும், எல்லாந்தாமாகி ஓங்குவது என்றும்