பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 கூறுவர். இருச்சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனிக் கடவுள் சமரச ஆனந்த சபைதனிலும், சுத்த சிவானந்த சபைதனிலும், எங்குமாய் விளங்குஞ் சிற்சபையிடத்திலும் இது அது என உரைப் பரிதாய்த் தங்கும் ஓர் இயற்கைத்தனி அனுபவம் என்று குறிப்பிடுகின் ருர். மேலும், எச்சபை பொதுவென இயம்பினர் அறிஞர்கள் அச்சபை யிடங்கொளும் அருட்பெருஞ்ஜோதி ' என்றதுங் காண்க. இவ்வுரைகளால் ஆண்டவனது இருப் பிடம் கூறியவாருயிற்று. இவற்றுள், எல்லா உயிர்களும் இயற்கை விளக்கச் சபைகளே ஆதலின் நமக்கு எளிதிற் புலனுகும் உயிர்கள் ஆண்டவன் தங்கியுள்ள கோயில்கள் என்பதும் ஒன்று. உயிருள் யாம் எம்முள் உயிர்இவை உணர்ந்தே உயிர்நலம் பரவுகஎன்று உரைத்தமெய்ச் சிவமே -திரு. 6:1; 973 என்றமை காண்க. ஆன்ம வொழுக்கம் பற்றி விளக்கவந்த அடிகள், யானைமுதல் எறும்பு ஈருகத் தோன்றிய சரீரங்களிலுள்ள ஜீவான் மாவே திருச்சபையாகவும், அதனுள் பரமான்மாவே பதி யாகவுங் கொண்டு யாதும் நீக்கமற எவ்விடத்தும் பேதமற்று எல்லாந்தானுக நிற்றல் ' என்றதும் இதனை வலியுறுத்தும். மேலும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன் அருள்வெளி, சிவவெளி எனப்படும் உயர்தனிப் பொதுவெளிகளில் அனுபவிக்கப்படுவதுமுண்டு.