பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 ஆண்டவனைக் கண்ட அ டி க ளு க் கு ஆண்டவன் தன்னேயே தந்தருளினுன். சிவ பதியை, சிவகதியை, சிவபோகத்தை, அருட் பெருஞ்ஜோதி அப்பனே அப்படியே பெற்று உவந்து அடிகள் பாடுகின்றனர். எப்பொருளு மெவ்வுயிரு மெவ்வுலகும் விளங்கவிளக் கிடுவான் றன்னைச் செப்பரிய பெரியவொரு சிவபதியைச் சிவகதியைச் சிவபோ கத்தைத் துப்புரவு பெறவெனக்கே யருளமுதந் துணிந்தளித்த துணையை யென்றன் அப்பனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ் ஜோதியைப்பெற்றே னச்சோ வச்சோ -திரு. 6: 47: 3 என்றும், தன்னையே எனக்குத் தந்துஅரு ளொளியால் என்னை வேதித்த என்தனி அன்பே -திரு. 6:1; 1479-80 என்றும் பாடிய அடிகள் சிவநெறியில் மேலுஞ் சென்று திளைத்தின்புறத் தலைப்படுவாராயினர். அமரரு முனிவரு மதிசயித் திடவே அருட்பெருஞ் ஜோதியை யன்புட னளித்தே கமமுறு சிவநெறிக் கேற்றியென் றனையே காத்தென துளத்தினிற் கலந்தமெய்ப் பதியே -திரு. 6: 101: 18 எல்லாந்தாமாகி நிலைக்குஞ் சிவானுபவத்தில் முடிந்த முடிபாக உள்ள தெய்வம் சிவமெனப்படும்,