பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 நோவாது நோன்புஎனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும் சாவா வரமெனப்போற் சார்ந்தவரும்-தேவாநின் பேரருளை என்போலப் பெற்றவரு மெவ்வுலகில் யாருளர்நீ சற்றே யறை -திரு. 6: 74:11. என்று கேட்கின் ருர். எல்லாம் சிவமயமே அன்றி வேறில்லை என்பார். மத சன்மார்க்கமும் சமய சன் மார்க்கமும் சிவ நிலையைப் புறங்கவியச் சொல்லவில்லை என் பார். இதனுல் இதற்குச் சுத்த சன்மார்க்கம் என்று பெயராயிற்று. சுத்த சன்மார்க் கத்தின் குறிக்கோள் ஆன்மலாபம். இந்த ஆன்ம லாபம் சுத்தசிவ துரியஅதீத நிலையில் பூரணப் படும். கடவுளின் பூரண இயற்கை இன்பம் இதுவே. மனித தேகத்தைப் பெற்றுக்கொண்ட ஜீவர்கள் இவ்வுலகில் அடையக்கடவதாகிய தனித்த பேரின் பம் இதுவே. ஒப்பற்ற இந்த இன்பத்தைத்தான் நமது சுவாமிகள் பெற்ருர்கள்; பெற்றவாறு விளக்குகின் ருர்கள். இவ் விளக்கத்திற்குச் சுத்த சன்மார்க்க சத்திய விளக்கம் என்று பெயர். எதற்கும் சிவமயம் என்று தொடங்கும் நற்றமிழ்ப் பண்பை என்னென்பது ! சன்மார்க்கம் என்பது நான்காவது மார்க்கம் என்பர். தாசமார்க்கம், புத்திரமார்க்கம், சகமார்க் கம், சன்மார்க்கம் எனும் இந் நான்கு மார்க்கங் களைக் கொண்டு ஆண்டவனே அடையலாம் என்றும், நாலுபேர் போன பாதையில் போ ’ என்பது முறையே அப்பர், சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர் ஆகிய நால்வர் கைக்கொண்ட வழிகள் என்றும் கூறுவர். சன்மார்க்கம் என்பதற்கு