பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 சுத்தசிவ சன்மார்க்கந் துலங்க வென்னை ஈன்ருனை -திரு. 6: 42: 8 ஆன்றசன் மார்க்கம் அணிபெற எனைத்தான் ஈன்றமு தளித்த இனிய நற் ருயே -திரு. 6:1; 1075 என்றமையின் சுத்தசன்மார்க்கத்தைப் பரப்புதற் பொருட்டு ஆண்டவன் இச்சையினுல் அடிகளேத் தோற்றுவித்தான் என்பது பெறப்படும். கலியுகம் 4925, இருபத்துநான்காம் பரிவட்டம் சுபானு வருடம் புரட்டாசி மாதம் இருபத்தோராம் நாளுக்குச் சரியான 1823 அக்டோபர் 5ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சு க் கி ல ப ட் சத் துதியை, சித்திரை நாலாங்கால் கூடிய துலா நல்லோரை யில் நம்மையெல்லாம் உய்விக்கச் சு. வா மி க ள் தோன்றினர். இராமலிங்க அடிகளின் அவதார நோக்கத்தைத் தொழுவூர் வேலாயுத முதலியார், மறைவிளங்க ஆகமவாய் மைகள் விளங்கச் சைவநெறித் துறைவிளங்க வடகலையும் தென்தமிழும் துணிபொருளின் நிறைவிளங்க நீடுயிர்கள் நெறிவிளங்க நிலைவிளங்கப் . பொறைவிளங்கப் பொய்புகுதா தேழையோம் புலம்விளங்க என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். இராமலிங்கம் எ ன் று பிள்ளைத் திருநாமம் சூட்டினர். அருட்குழவியின் ஐந்தாம் திங்களில் பெற்ருேர் இருவரும் தில்லையம்பலவனை வழிபடு வதற்குத் த ம் ம க வுட ன் வந்தனர். அப்பைய தீட்சதர் என்னும் அந்தணர் கோயிலில் இவர்கள்